
கேடிஎம் இந்தியாவின் பிரசத்தி பெற்ற 160 டியூக் பைக்கில் கூடுதலாக 5-அங்குல வண்ண டிஎஃப்டி (TFT) கிளஸ்ட்டருடன் கூடிய புதிய வேரியண்ட் ரூ.1.79 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இது முந்தைய மாடலின் அடிப்படையான அனைத்து அம்சங்களை பெற்றாலும் டிஎஃப்டி கிளஸ்ட்டருக்காக ரூ.8,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
KTM 160 Duke
புதிய மாடலின் மிக முக்கியமான 5-அங்குல வண்ண டிஎஃப்டி ஆனது ஏற்கனவே கேடிஎம் 390 டியூக் பைக்கில் உள்ளதைப் போன்றே வடிவமைக்கப்பட்டு மை கேடிஎம் செயலியுடன் முன்பின் தெரியாத இடங்களுக்குச் செல்லும்போது, திருப்பத்திற்குத் திருப்பம் வழிகாட்டுதலை இந்தத் திரையிலேயே பார்த்துக்கொள்ளவதுடன், பயணம் செய்யும்போதே வரும் அழைப்புகளை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ முடியும். மேலும், ஹெல்மெட் ஹெட்செட் இணைக்கப்பட்டிருந்தால், பாடல்களைக் கட்டுப்படுத்தும் வசதியும் உள்ளது.
கிளஸ்ட்டரின் பேக்கிரவுண்டை வெளிச்சத்திற்கு ஏற்ப அல்லது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இதை மாற்றிக்கொள்ளலாம். பைக்கின் இடது கைப்பிடியில் உள்ள புதிய 4-வழி சுவிட்ச் மூலம் திரையைக் கட்டுப்படுத்தவும், சூப்பர்மோட்டோ ஏபிஎஸ் பின் சக்கரத்திற்கான ஏபிஎஸ் ஆஃப்/ஆன் செய்யும் வசதியையும் இந்தத் திரை மூலமாகவே செயல்படுத்த முடியும்.
164.2 சிசி, லிக்விட்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு 18.7 bhp மற்றும் 15.5Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 6-வேக கியர் பாக்ஸுடன் உள்ளது. யமஹா எம்டி-15 போன்ற பைக்குகளுக்குப் போட்டியாக இந்த புதிய மாடல் களமிறங்கியுள்ளது.

