இந்தியாவில் கேடிஎம் நிறுவனத்தின் அடுத்த பைக் மாடலாக 390 அட்வென்ச்சர் விற்பனைக்கு வெளியாக உள்ள நிலையில் 250 அட்வென்ச்சர் மாடல் 2020 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
390 அட்வென்ச்சர் பைக்கின் பின்புலத்தை பெற்று வந்துள்ள 250 அட்வென்ச்சர் மாடலில் பல்வேறு விலை குறைப்பிற்கான நடவடிக்கையுடன் 250 டியூக் மாடலில் இடம்பெற்றுள்ள 249.8 சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 30 பிஎச்பி பவரையும், 24 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்படலாம்.
மற்றபடி தோற்ற அமைப்பில் பெரும்பாலும் 390 அட்வென்ச்சர் பேனல்களை பகிர்ந்து கொள்கின்ற 250 அட்வென்ச்சரில் டிஎஃப்டி டிஸ்பிளே கிளஸ்ட்டரை பெற்றதாக வரவுள்ளது. இந்த பைக்கில் 855 மிமீ இருக்கை உயரம், 200 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்றதாகவும் 14.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கினை பெற்றுள்ளது. 390 ADV மாடலில் உள்ளதை போன்ற ஸ்பிளிட் எல்இடி விளக்கினை பெறவில்லை.
இந்த மாடல் வரவிருக்கும் யமஹா FZ25 அட்வென்ச்சர் மற்றும் ஜிக்ஸர் 250 அட்வென்ச்சர் போன்ற மாடல்களை 250 அட்வென்ச்சர் எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.