Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
ரூ.2.99 லட்சத்தில் கேடிஎம் 390 அட்வென்ச்சர் விற்பனைக்கு வெளியானது | KTM 390 Adventure Price

ரூ.2.99 லட்சத்தில் கேடிஎம் 390 அட்வென்ச்சர் விற்பனைக்கு வெளியானது

ktm 390 adventure

இந்தியாவில் கேடிஎம் நிறுவனத்தின் புதிய 390 அட்வென்ச்சர் பைக் மாடல் ரூ.2.99 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முன்பதிவு முன்பே நடைபெற்ற வரும் நிலையில் விரைவில் விநியோகிக்கப்பட உள்ளது.

சர்வதேச அளவில் கிடைக்கின்ற மாடல்களில் உள்ள சில முக்கிய வசதிகள் இந்திய சந்தைக்கு என மாறுபடுகின்றது. குறிப்பாக, இந்தியாவுக்கான கேடிஎம் 390 அட்வென்ச்சர் மெட்ஸெலர் டூரன்ஸ் டயர்களை முன்பக்கத்தில் 100 / 90-19 டயர் மற்றும் பின்புறத்தில் 130 / 80-17 டயர் பெறுகிறது. சஸ்பென்ஷன் அமைப்பினை பொறுதவரை 43 மிமீ யூஎஸ்டி ஃபோர்க் வழங்கப்பட்டாலும், ஆனால், அட்ஜெஸ்ட் மற்றும் ரீபவுண்டு சரிசெய்தலை வழங்கும் சர்வதேச பைக்கினை போலன்றி, இது அட்ஜெஸ்ட் செய்ய முடியாத அமைப்பை பெறுகின்றது. பின்புற மோனோஷாக் சஸ்பென்ஷன், இதில் ப்ரீலோடு மற்றும் ரீபவுன்டு வழங்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் 19 அங்குல வீல் மற்றும் 17 அங்குல பின்புற அலாய் மற்றும் வீல்களை கொண்டுள்ளது. ஆன்ரோடு மற்றும் ஆஃப்ரோடு பயணத்துக்கு ஏற்ப டயரினை கொண்டுள்ளது. பிரேக்குகளில் முன்புறத்தில் ரேடியல் காலிபருடன் கூடிய 320 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் ஆகியவை பெற்றுள்ளது.

இந்நிறுவனத்தின் முதல் பிஎஸ்6 என்ஜினை பெறும் மாடலாக இந்த பைக் விளங்குகின்றது. 9,500 ஆர்பிஎம் சுழற்சியில் 43 பிஎஸ் பவர், 7,250 ஆர்பிஎம் சுழற்சியில் 37 என்எம் டார்க்கையும் வழங்க வல்லதாகும். 6 வேக டிரான்ஸ்மிஷன் பெற உள்ளது. கே.டி.எம் 390 அட்வென்ச்சர் பைக் புனேவுக்கு அருகிலுள்ள பஜாஜின் சக்கான் ஆலையில் தயாரிக்கப்பட உள்ளது.

ரூ .2.99 லட்சத்தில், 390 அட்வென்ச்சர் மாடல் அதன் 390 டியூக் மாடலை விட ரூ .51,000 அதிகமாக அமைந்துள்ளது. ஆனால் அதன் நேரடி போட்டியாளர்களான பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் (ரூ. 3.49 லட்சம்) மற்றும் கவாஸாகி வெர்சிஸ் எக்ஸ் 300 (ரூ. 4.69 லட்சம்) விலையில் கிடைக்கின்றது.

Exit mobile version