இந்தியாவில் கேடிஎம் 390 அட்வென்ச்சர் சோதனை ஓட்டம்

இந்தியாவில் 2019 ஆம் ஆண்டின் பைக் வரவுகளில் மிக முக்கியமான ஒன்றான கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்  சோதனை செய்யப்படுகின்ற படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

2019 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற கேடிஎம் 390 அட்வென்ச்சர் ரக பைக் மாடல் இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற படங்கள் வெளியாகியுள்ள நிலையில், முழுதாக மூடப்பட்ட நிலையில் படங்கள் அமைந்துள்ளது.

ஆஃப் ரோடு சாகசத்துக்கு ஏற்றதாக விளங்கும் வகையில் வரவுள்ள இந்த அட்வென்ச்சர் மாடல் டியூக் 390 மாடலில் இடம்பெற்றுள்ள  43 BHP பவர் மற்றும் 37 Nm டார்க் வழங்குகின்ற 373cc லிக்யூடு கூல்டு என்ஜினை பெற்றிருக்கும். 19 இன்ச் முன்பக்க வீல் மற்றும் 17 இன்ச் பின்புற வீல் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றதாக சோதனை ஓட்ட படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் முன்புறத்தில் ஸ்பிளிட் செய்யப்பட்ட எல்இடி விளக்கு , பின்புறத்தில் எல்இடி விளக்கு, அப்சைடு டவுன் ஃபோர்க் சஸ்பென்ஷனை முன்புறத்திலும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை பெற்றதாக உள்ளது.

மிகவும் ஸ்டைலிஷான, பவர்ஃபுல்லான மற்றும் ஆஃப் ரோடு, ஆன் ரோடு என இரண்டிலும் அசத்தலான அனுபவத்தை தரும் மாடலாக வரவுள்ள கேடிஎம் 390 அட்வென்ச்சர் மாடல் சாதாரன டியூக் 390 மாடலை விட ரூ. 40,000 வரை விலை அதிகரிக்கப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்படலாம்.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் 2019 ஆம் ஆண்டின் மத்தியில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரக்கூடும்.

Exit mobile version