பிரபலமான ஸ்போர்ட்டிவ் பைக் தயாரிப்பாளரான கேடிஎம் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் E-Duke கான்செப்ட் மாடலை ஆஸ்திரியாவின் மேட்டிகோஃபெனில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் அமைந்துள்ள கேடிஎம் மோட்டோஹாலில் காட்சிப்படுத்தியுள்ளது.
எவ்விதமான நுட்ப விபரங்களும் கிடைக்காத நிலையில் இந்த மாடலை பொருத்தவரை பேட்டரி உட்பட பல்வேறு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை, இருந்தாலும் பார்த்தால் உற்பத்தி நிலை மாடலுக்கு இணையாகவே இந்த கான்செப்ட் நிலை மாடல் ஆனது அமைந்திருக்கின்றது.
ஆனால் ஒரு சில ஊகங்களின் அடிப்படையில் 5.5kWh பேட்டரி பேக்கினை பெற்று அதிகபட்சமாக 10Kw பவரை வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் முழுமையான 100 % சார்ஜில் 120 கிமீ வரை வெளிப்படுத்தலாம்.
தற்பொழுது சந்தையில் கிடைக்கின்ற ICE கேடிஎம் 390 duke அடிப்படையிலான டிசைன் வடிவமைப்பினை பகிர்ந்து கொள்கின்ற இந்த மாடலானது பெரும்பாலான உற்பத்தி நிலை பாகங்கள் அனைத்தும் 390 டியூக்கில் பெறப்பட்டதாக தெரிகின்றது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சேஸிஸ் மற்றும் சஸ்பென்ஷன் என பலவற்றையும் இந்த மாடல் ஆனது பகிர்ந்து கொள்வதாக தெரிகின்றது.
மற்றபடி, ஹெட்லைட், இருக்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்நிறுவன எதிர்கால மாடல்களுக்கு இணையான டிசைனை கொண்டுள்ளது. புதிய கேடிஎம் இ-டியூக் 2026 அல்லது 2027 ஆம் ஆண்டு சந்தைக்கு வரக்கூடும்.
View this post on Instagram
image source – Rok Bagoros