Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் HD 4XX அறிமுக விபரம்

by MR.Durai
5 April 2023, 9:44 am
in Bike News
0
ShareTweetSend

Harley Davidson hd

ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியில் உருவாகும் முதல் 400cc+ என்ஜின் பெற்ற முதல் பைக் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பைக் HD 4XX  என்ற பெயருடன் சோதனை செய்யப்பட்டு வவருகின்றது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய சந்தையில் குறைந்த விலையில் ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு சவாலாக விளங்கும் வகையில் ஹார்லி-டேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணி அமைத்திருந்தது.

ஹீரோ-ஹார்லி டேவிட்சன் பைக்

ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் குறைந்த விலையில் புதிய ஏர் அல்லது ஆயில் கூல்டு 400cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் பெற்றிருக்கும். இந்த என்ஜின் 440cc இருக்கலாம். ஹார்லியின் நிறுவனத்தின் ஐகானிக் 883cc V-ட்வின் என்ஜினை இரண்டாக பிரித்தால் 440cc என்ஜினாக இருக்கலாம் அல்லது ஹீரோ புதிய என்ஜினை உருவாக்கியிருக்கலாம்.

Harley Davidson hd 450 cluster

தற்போது, பவர், டார்க் தொடர்பான எந்த தகவலும் இல்லை. தோற்ற வடிவமைப்பில் முந்தைய ஹார்லி-டேவிட்சன் XR1200 ரோட்ஸ்டர் பைக்கில் இருந்து ஈர்க்கப்பட்ட வடிவமைப்பினை கொண்டுள்ளது. ரோட்ஸ்டெர் ஸ்டைலை பெற்ற மிக நேர்த்தியான முரட்டுதனமான டேங்க் கொண்டு அகலமான டயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

சஸ்பென்ஷன் அமைப்பில் ஹார்லியில் டெலஸ்கோபிக் ஃபோர்க்கிற்குப் பதிலாக அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர் கொண்டதாக அமைந்துள்ளது.

பைக்கின் முன் மற்றும் பின்புறத்தில் Bybre டிஸ்க் பிரேக்குகளுடன் பொருத்தப்பட்டுள்ளது (இரட்டை சேனல் ஏபிஎஸ் ), மேலும் அலாய் வீல் முன்பக்கத்தில் 18-இன்ச் மற்றும் பின்புறம் 17-இன்ச் கொடுக்கப்பட்டு  சீயட் ஜூம் க்ரூஸ் 140 டயர்களைக் கொண்டுள்ளது.

Harley Davidson HD 400 pics

8,000rpm ரெட்லைன் குறிக்கப்பட்டுள்ள அனைத்து டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் காணப்படுகின்றன. இந்த கிளஸ்ட்டரில் ரைடர்ஸ் தங்கள் ஸ்மார்ட்போனை மோட்டார்சைக்கிளுடன் புளூடூத் இணைப்பையும் ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

ஹார்லி-டேவிட்சன் ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 350 மாடலுக்கு போட்டியாக இந்தியாவில் நடுத்தர மோட்டார் சைக்கிள் சந்தையில் ஹீரோ நிறுவனத்தின் மூலமாக புதிய ஹார்லி-டேவிட்சன் HD 440 பைக் விலை ரூ.2.5 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) அமைந்திருக்கலாம்.

வரும் தீபாவளி பன்டிகைக்கு முன்னதாக ஹார்லி-டேவிட்சன் 350 விற்பனைக்கு வரக்கூடும்.

Harley Davidson hd 4xx tyre

Related Motor News

No Content Available
Tags: Harley-Davidson HD 4XX
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

TVS Ntorq 150 scooter

டிவிஎஸ் என்டார்க் 150 முக்கிய வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்

ஹீரோ ஜூம் 160

ஹீரோவின் ஜூம் 160 மேக்ஸி ஸ்கூட்டரின் முன்பதிவு, டெலிவரி விபரம்

செப்டம்பர் 4ல் என்டார்க் 150 விற்பனைக்கு வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,

ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்

ஏதெர் 450 ஏபெக்ஸ் ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது

ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டரில் தொடுதிரை மற்றும் புதிய நிறங்கள்

மேக்ஸி ஸ்டைலில் ஏதெர் EL01 கான்செப்ட் வெளியானது

5,145 ஜிக்ஸர் 250 பைக்குகளை திரும்ப அழைத்த சுசுகி மோட்டார்சைக்கிள்

158 கிமீ ரேஞ்சுடன் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan