இத்தாலியின் பிரசத்தி பெற்ற சூப்பர் பைக் தயாரிப்பாளரான MV அகுஸ்டா வெளியிட்டுள்ள டீசர் வீடியோ ஒன்றில் RVS மோட்டார்சைக்கிள் பிராண்டு பற்றி விளக்கத்தையும் மாடல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

RVS மோட்டார்சைக்கிள்

ஆர்விஎஸ் மோட்டார்சைக்கிள் என டீசர் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவில் RVS என்றால் Reparto Veicoli Speciali என இத்தாலியில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் பொருள் என்னவென்றால் சிறப்பு வாகன துறை அதாவது ஆங்கிலத்தில் Special Vehicles Department என்பதாகும்.

இதன் துனை பிராண்டின் வாயிலாக சூப்பர் மோட்டார் சைக்கிள்களுக்கு வாடிக்கையாளர் விரும்பும் வகையிலான கஸ்டமைஸ் வசதியை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது அதிகார்வப்பூர்வமான கஸ்டமைஸ் ஆப்ஷன் வாயிலாக தோற்ற அமைப்பில்மாற்றுதல் கூடுதல் திறன் சார்ந்த நுட்பங்களை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் MV அகுஸ்டா நிறுவனத்தின் சூப்பர் பிராண்டில் 5 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. எனவே இந்தியாவிலும் ஆர்விஎஸ் மோட்டார்சைக்கிள் சார்ந்த அம்சங்களை வழங்கலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.