கடந்த 2016 டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தப்பட்ட ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் உற்பத்தி நிலை மாடலாக மிக நேர்த்தியான வடிவமைப்புடன், இந்நிறுவனத்தின் முதல் பிரிமியம் ரக 200 சிசி மாடலாக வெளியிடப்பட உள்ள இந்த பைக் இந்நிறுவனத்துக்கு புதியதோர் அத்தியாயத்தை தொடங்க காரணமாக அமைய உள்ளது.
வருகின்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வரவுள்ள இந்த 200R பைக் விற்பனைக்கு நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஹீரோ நிறுவனத்தின் சொந்த தயாரிப்பாக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 200 பைக்கில் மிக இலகு எடை மற்றும் உறுதி தன்மையுடன் கூடிய ஃபிரேம் கொண்டு ஆக்ரோஷமான ஸ்டைலிங் அம்சத்தை கொண்டதாக தோற்ற அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மிக நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் டேங்கில் சிறப்பான கிராபிக்ஸ் கொண்டு எக்ஸ்டீரிம் என பொறிக்கப்பட்டு, முன்புறத்தில் கூர்மையான அமைப்பை கொண்ட ஹெட்லேம்புடன், கண் இமைகளை போன்ற எல்இடி பைலட் விளக்குகளை பெற்றுள்ளது.
மிக சிறப்பான சொகுசு தன்மையை நெடுந்தூர பயணத்திலும் வழங்கும் வகையில் அகலமான இருக்கையை கொண்டிருப்பதுடன், பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்குகளை பெற்றுள்ளது.
எக்ஸ்ட்ரீம் 200 பைக்கில் இரு நிற கலவை அம்சத்தை பெற்றிருப்பதனால் கருப்பு நிறத்துடன் சில்வர், கருப்பு நிறத்துடன் சிவப்பு, ஸ்போர்ட்ஸ் சிவப்பு, கிரே மற்றும் நீலம் ஆகிய 5 நிறங்களில் கிடைக்க உள்ளது.
மிக சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட எஞ்சினாக விளங்க உள்ள எக்ஸ்ட்ரீம் 200R பைக்கில் பொருத்தப்பட்டுள்ள எஞ்சின் அதிகபட்சமாக 18 பிஹெச்பி ஆற்றல் மற்றும் 17 என்எம் டார்க் வழங்கும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மிக சிறப்பான வகையில் எஞ்சினை பேலன்ஸ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஷாஃப்ட்கள் அதிர்வுகளை முழுமையாக கட்டுப்படுத்தும் என ஹீரோ தெரிவித்துள்ளது.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 R பைக் அதிகபட்சமாக மணிக்கு 114 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன், 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்ககு வெறும் 4.6 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.
முன்புறத்தில் 37 மிமீ கொண்ட ஃபோர்க்குகளுடன் டயரில் 276 மிமீ கொண்ட டிஸ்க் பிரேக்குடன், பின்புறத்தில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான மோனோஷாக் அப்சார்பரை பெற்று டயரில் 220 மிமீ டிஸ்க் பிரேக்குடன், கூடுதலாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆப்ஷனலாக வழங்கப்பட உள்ளது. முன்புறத்தில் 17 அங்குல வீலுடன் 100/80 ரேடியல் டயருடன் பின்புறத்தில், 130/70 டயர் பொருத்தப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ 2018 அரங்கில் காட்சிக்கு வரவுள்ள எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக் முன்பதிவு அடுத்த சில வாரங்களில் தொடங்க உள்ள நிலையில் ஏப்ரல் முதல் வாரத்தில் நாடு முழுவதும் உள்ள ஹீரோ டீலர்களிடம் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.
டிவிஎஸ் அப்பாச்சி 200, பஜாஜ் பல்சர் 200NS ஆகிய மாடல்களை எதிர்கொள்ள உள்ள எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக் சுசூகி ஜிக்ஸெர், ஹார்னெட் 160ஆர் ஆகியவற்றையும் எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளது.
இந்தியாவில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் ரூ.85,000 முதல் ரூ.95,000 வரையிலான விலைக்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…