ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் தயாரித்து வருகின்ற புதிய 450cc லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்ற ஹிமாலயன் 450 பைக்கின் அடிப்படையில் ஸ்கிராம் 450 அல்லது ஹண்டர் 450 மாடல் தயாரிக்கப்பட்டு வருவது சாலை சோதனை ஓட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய 450cc லிக்யூடு கூல்டு என்ஜின் பிளாட்ஃபாரத்தில் வரவுள்ள மாடல்கள் கேடிம் 390 அட்வென்ச்சர், 390 டியூக், பஜாஜ்-ட்ரையம்ப் ஸ்கிராம்பளர், ஹார்லி-டேவிட்சன் X440 உள்ளிட்ட பல்வேறு மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.
சோதனை செய்யப்பட்டு வருகின்ற ஹிமாலயன் 450 பைக்கை விட மிக எளிமையாக பல்வேறு எக்ஸ்டென்ஷன்கள் பாடி வொர்க் எதுவும் இல்லாமல், எளிமையான தோற்றத்தை வெளிப்படுத்தும் ஸ்கிராம் 411 போலவே அமைந்திருக்கின்றது.
ஹண்டர் 450 அல்லது வேறு ஏதேனும் பெயரை பெறவிருக்கின்ற இந்த மாடலில் இரு பக்க டயர்களிலும் 17 அங்குல வீல் வழங்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் கொடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 450cc வரிசையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பல்வேறு மாடல்களை அறிமுக செய்ய வாய்ப்புகள் உள்ளது. இதற்கான துவக்க நிலையில் உள்ள சோதனை ஓட்டத்தில் உள்ளதால் அனேகமாக அடுத்த ஆண்டின் துவக்கத்தில் அல்லது EICMA மோட்டார் ஷோ அரங்கில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.