Automobile Tamilan

செப்டம்பர் 17-ல் புதிய ட்ரையம்ப் 400சிசி பைக் அறிமுகம்

Triumph speed 400 motorcycle

பஜாஜ் ஆட்டோ மற்றும் ட்ரையம்ப் கூட்டணியில் உருவான முதல் மோட்டார் சைக்கிள் ஸ்பீடு 400, ஸ்கிராம்பலர் 400 எக்ஸ் என இரண்டு மாடல்களை தொடர்ந்து அடுத்ததாக மூன்றாவதாக ஒரு மாடல் அனேகமாக இது ஸ்பீடு 400 அடிப்படையில் விற்பனைக்கு வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பஜாஜ் ஆட்டோ நிறுவன தலைவர் குறிப்பிட்டபடி, இரண்டு புதிய பைக்குகளை 400 சிசி இன்ஜின் பிரிவில் ட்ரையம்ப் மூலம் விற்பனைக்கு கொண்டு வர உள்ளதாக குறிப்பிட்டு இருந்தார்.

வரவுள்ள மாடல் தொடர்பாக வெளியிட்டுள்ள டீசரில் டேங்கின் தோற்றம் வெளியாகி உள்ளது இது ஏற்கனவே விற்பனையில் இருக்கின்ற ஸ்பீடு 400 பைக் மாடலை போலவே இருப்பதால் அனேகமாக இது ஸ்பீடு 400 யின் புதிய வேரியண்ட் ஆக இருக்கலாம் அல்லது மாறுபட்ட ஏற்கனவே சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட ஃபேரிங் ஸ்டைல் கொண்ட திரஸ்டன் 400 மாடலாகவும் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

மற்றபடி இன்ஜின் அடிப்படையான மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்த ஒரு மாற்றங்களும் இருக்காது என தெரிகின்றது. கூடுதலான கணக்டிவிட்டி சார்ந்த வசதிகளை பெறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

வரும் செப்டம்பர் 17ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிவிக்கப்பட உள்ளது.

Exit mobile version