இந்தியாவில் எலக்ட்ரிக் பைக் தயாரிப்பாளர்களில் மிக முக்கியமான ஓபென் எலக்ட்ரிக் நிறுவனம் ரோர் EZ சிக்மா மின்சார மோட்டார்சைக்கிளில் 3.4Kwh மற்றும் 4.4Kwh என இரண்டு பேட்டரி ஆப்ஷனில் முறையே ரூ.1,27,000 முதல் ரூ.1,37,000 வரை எக்ஸ்-ஷோரும் விலை அறிமுக சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.20,000 வரை அறிமுக சலுகையாக விலை குறைக்கப்பட்டுள்ள இரு பேட்டரி ஆப்ஷனை பெற்றாலும் பொதுவாக அனைத்து விதமான நுட்பங்கள் மற்றும் பவர் சார்ந்த அம்சங்கள் வசதிகளில் ஒரே மாதிரியாக அமைந்துள்ளது.
Oben Rorr EZ Sigma
3.4Kwh மற்றும் 4.4Kwh இரு Lithium Ferro Phosphate (LFP) பேட்டரி ஆப்ஷனிலும் அதிகபட்ச வேகம் மணிக்கு 95 கிமீ உள்ள நிலையில், 7.5Kw பவரை வெளிப்படுத்தும் மோட்டார் கொண்டு 236 என்எம் வரை டார்க் வழங்குவதுடன் Eco – 45 km/h, City – 65 km/h , மற்றும் Havoc – 95 km/h என மூன்று விதமான ரைடிங் மோடுகளை ரோர் இசட் சிக்மா பெற்றுள்ளது.
ஆரம்ப நிலையில் உள்ள 3.4Kwh பேட்டரி ஆப்ஷன் கொண்ட வேரியண்ட் 0-80 % சார்ஜிங் பெற 1.30 மணி நேரமும் , 100 % சார்ஜில் 140 கிமீ ரேஞ்ச் வழங்கும் என IDC சான்றிதழ் பெற்றுள்ளது.
டாப் 4.4Kwh பேட்டரி பேக் ஆனது முழுமையான சிங்கிள் சார்ஜில் 175 கிமீ ரேஞ்ச் வழங்கும் என IDC சான்றிதழ் பெற்று, 0-80 % சார்ஜிங் பெற 2 மணி நேரமும் எடுத்துக் கொள்ளும் என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
வெள்ளை, அம்பெர், சியன் மற்றும் சிவப்பு என நான்கு நிறங்களை பெற்றுள்ள இந்த எலக்ட்ரிக் பைக்கில் 5 அங்குல கலர் டிஎஃப்டி டிஸ்பிளே பெற்றதாகவும், பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை டெலிஸ்கோபிக் ஃபோர்கு, பின்புறத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது.
ஓபென் எலக்ட்ரிக் ஆப் ஒரு வருட இலவச சந்தாவைப் பெறுவதால், இதன் மூலம் ரைடிங் கண்காணிப்பு, ஜிபிஎஸ் இருப்பிட சேவைகள், தொலைதூர நோயறிதல்கள் மற்றும் 68,000 க்கும் மேற்பட்ட சார்ஜிங் நிலையங்களுக்கான அணுகலை செயல்படுத்துகிறது.
17 அங்குல வீல் பெற்று முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் ஆப்ஷனுடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் கொண்டுள்ள இந்த ரோர் இசட் சிக்மா பைக்குகளுக்கு போட்டியாக ஓலா ரோட்ஸ்டெர், ரிவோல்ட் பைக்குகள் கிடைக்கின்றது.
இந்நிறுவனம் பேட்டரி ப்ரொடெக்ட் 8/80 திட்ட உத்தரவாதத்தை ₹9,999க்கு வழங்குகிறது, இது எட்டு ஆண்டுகள் அல்லது 80,000 கி.மீ வரை உத்தரவாதம் வழங்குகின்றது.
ரூ.2,999 முன்பதிவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு தமிழ்நாட்டில் முதற்கட்டமாக சென்னையில் புக்கிங் துவங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் டீலர்களை இந்நிறுவனம் துவங்க வாய்ப்புள்ளது. மேலும் தற்பொழுது டீலர்கள் உள்ள இடங்களில் ஆகஸ்ட் 15 முதல் டெலிவரி வழங்கப்பட உள்ளது.