Auto News

₹74,999 விலையில் ஓலா ரோட்ஸ்டெர் எலெக்ட்ரிக் பைக் அறிமுகமானது

ola roadster x bike 1

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ரோட்ஸ்டெர் பைக்கின் ஆரம்ப விலை ரூபாய் 74,999 முதல் துவங்கி ரூ.2.49 லட்சம் வரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரோட்ஸ்டெர் X, ரோட்ஸ்டெர் மற்றும் ரோட்ஸ்டெர் புரோ என மூன்று விதமான வேரியண்டுகளில் ஏழு விதமான மாறுபட்ட வேரியண்டுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

Ola Roadster X

துவக்கநிலை சந்தைக்கு வந்துள்ள ரோட்ஸ்டெர் X மாடலில் 2.5 kWh, 3.5kwh, மற்றும் 4.5 kWh என்ன மூன்று விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றிருக்கின்றது. இந்த மாடல்களில் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் கொடுக்கப்பட்டு கம்பைண்ட் பிரேக்கிங் சிஸ்டத்துடன் 4.3 அங்குல எல்சிடி கிளஸ்ட்டர் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது.

சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வின் ஷாக் சஸ்பென்ஷன் இடம் பெற்று இருக்கின்றது.

வழக்கமான எல்இடி ஹெட்லைட் பெற்று இந்த மூன்று மாடல்களிலும் ஸ்போர்ட்ஸ், நார்மல் மற்றும் ஈகோ என மூன்று ரைடிங் மோடுகளுடன் வந்துள்ளது. இந்த மூன்று மாடல்களின் டெலிவரி 2025 ஜனவரி மாதம் முதல் துவங்க உள்ளது.

  • ரூ.74,999 விலையில் கிடைக்கின்ற ஓலா ரோட்ஸ்டெர் X 2.5 kWh வேரியண்டில் பவர் 11kw வெளிப்படுத்தும் நிலையில் அதிகபட்ச வேகம் 105km/hr கொண்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 117 கிமீ ரேஞ்ச் வழங்கும். இதன் சார்ஜிங் நேரம் 0-80% பெற 3.3 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • ரூ.84,999 விலையில் கிடைக்கின்ற ஓலா ரோட்ஸ்டெர் X 3.5 kWh வேரியண்டில் பவர் 11kw வெளிப்படுத்தும் நிலையில் அதிகபட்ச வேகம் 117km/hr கொண்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 159 கிமீ ரேஞ்ச் வழங்கும் என தெரிவித்துள்ளது. சார்ஜிங் நேரம் 0-80% பெறுவதற்கு 4.6 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது..
  • ரூ.99,999 விலையில் கிடைக்கின்ற ஓலா ரோட்ஸ்டெர் X 4.5 kWh டாப் வேரியண்டின் பவர் மற்ற இரண்டை போலவே 11kw வெளிப்படுத்தும் நிலையில் அதிகபட்ச வேகம் 124km/hr கொண்டு முழுமையான 100% பேட்டரி சார்ஜில் 200 கிமீ ரேஞ்ச் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சார்ஜிங் நேரம் 0-80% பெற 5.9 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என கூறப்பட்டுள்ளது.

Ola Roadster

அடுத்து ரூ.1,04,999 விலையில் துவங்குகின்ற ஓலா ரோட்ஸ்டெரில் 3.5 kWh, 4.5 kWh மற்றும் 6 kWh என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றிருக்கின்றது. இந்த மாடலில் ஹீல் ஹோல்டு மற்றும் டிசென்ட் வசதி, டயர் பிரெஷர் மானிட்டர், டெம்பர் அலெர்ட், 6.8 அங்குல தொடுதிரை TFT கிளஸ்டரில் கனெக்ட்டிவிட்டி அம்சங்கள் மற்றும் ஓலா மேப் நேவிகேஷன் உள்ளன.

மூன்று விதமான நிறங்களை பெற உள்ள இந்த மாடலில் எல்இடி ப்ராஜெக்டர் ஹெட் லைட் , இரு பக்க டயர்களிலும் டிஸ்கிரைப் கொடுக்கப்பட்டு சிங்கிள் சேனல் கார்னரிங் ஏபிஎஸ் ஆனது கொடுக்கப்படுகின்றது.

ரோட்ஸ்டெர் மாடலில் ஹைப்பர், ஸ்போர்ட்ஸ், நார்மல் மற்றும் ஈகோ என நான்கு ரைடிங் மோடுகளுடன் சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் டெலஸ்கோப்பிக் போர்க் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாடல்களின் டெலிவரி 2025 ஜனவரி மாதம் முதல் துவங்க உள்ளது.

  • ரூ.1,04,999 விலையில் கிடைக்கின்ற ஓலா ரோட்ஸ்டெர் 3.5 kWh வேரியண்டில் அதிகபட்ச பவர் 13kw வெளிப்படுத்தும் நிலையில் மணிக்கு அதிகபட்ச வேகம் 116km/hr கொண்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 151 கிமீ ரேஞ்ச் வழங்கும். இதன் சார்ஜிங் நேரம் 0-80% பெற 4.6மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • ரூ.1,19,999 விலையில் உள்ள ஓலா ரோட்ஸ்டெர் 4.5 kWh வேரியண்டின் பவர் 13kw வெளிப்படுத்தும் நிலையில் வேகம் அதிகபட்சமாக 126km/hr கொண்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 190 கிமீ ரேஞ்ச் வழங்கும் என தெரிவித்துள்ளது. சார்ஜிங் நேரம் 0-80% பெறுவதற்கு 5.9 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது..
  • ரூ.1,39,999 விலையில் கிடைக்கின்ற ஓலா ரோட்ஸ்டெர் 6 kWh டாப் வேரியண்டின் பவர் மற்ற இரண்டை போலவே 13kw வெளிப்படுத்தும் நிலையில் அதிகபட்ச வேகம் 126km/hr கொண்டு முழுமையான 100% பேட்டரி சார்ஜில் 248 கிமீ ரேஞ்ச் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சார்ஜிங் நேரம் 0-80% பெற 7.9 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என கூறப்பட்டுள்ளது.

Ola Roadster Pro

ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெற்றுள்ள ரோட்ஸ்டெர் புரோ எலெக்ட்ரிக் பைக்கில் 8kwh மற்றும் 16kwh என இரண்டு பேட்டரி ஆப்ஷனை பெற்றுள்ளது. கார்னரிங் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்று இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக் பெற்றுள்ளது.

10 அங்குல TFT டிஸ்பிளே பெற உள்ள மாடலின் 16kwh பேட்டரி கொண்ட வேரியண்டில் லிக்யூடு கூல்டு மோட்டாருடன் பவர் 52kw மற்றும் டார்க் 105 Nm ஆக உள்ள நிலையில் மணிக்கு அதிகபட்ச வேகம் 194km/hr பெற்று முழுமையாக சிங்கிள் சார்ஜில் 579 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் அறிமுகம் அடுத்த ஆண்டின் தீபாவளி 2025 சமயத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ரோட்ஸ்டெர் புரோ மாடலில் ஹைப்பர், ஸ்போர்ட்ஸ், நார்மல் மற்றும் ஈகோ என நான்கு ரைடிங் மோடுகளுடன் சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் அப்சைடு டவுன் போர்க் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • Ola Roadster Pro 8 kWh – ₹ 1,99,999
  • Ola Roadster Pro 16 kWh – ₹ 2,49,999

கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை விபரம்

Recent Posts

செப்டம்பர் 16ல் புதிய டிவிஎஸ் அப்பாச்சி RR 310R அறிமுகம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…

1 day ago

சென்னையில் ஃபோர்டு கார்களை தயாரிக்க ஜேஎஸ்டபிள்யூ கூட்டணி..?

அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…

1 day ago

செப்டம்பர் 16ல் கியா கார்னிவல் முன்பதிவு துவங்குகின்றது

வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…

1 day ago

மீண்டும் HF டான் பைக்கை வெளியிடும் ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…

1 day ago

புதிய கார்பன் ஃபைபர் பேட்டர்னில் 2024 யமஹா R15M விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…

2 days ago

மீண்டும் ஃபோர்டு இந்திய வருகை உறுதியானது..!

சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…

2 days ago