பட்ஜெட் விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்ட ஓலா நிறுவனம் ஜூலை 28 முதல் விற்பனை துவங்கிய நிலையில் ஆரம்ப கட்ட சலுகையாக ரூ.1,09,999 விலையில் S1 ஏர் அறிமுகம் செய்யப்பட்டது.
ஜூலை 31 முதல் ரூ.1,19,999 ஆக விலை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிறப்பு தள்ளுபடி ரூ.10,000 வழங்கப்பட்ட சலுகை முன்பதிவு செய்யாத அனைவருக்கும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இரவு 8 மணி வரை கிடைக்கும் என ஓலா எலக்ட்ரிக் நிறுவன தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
Ola S1 Air escooter
முதல் நாளே 3,000 க்கு மேற்பட்ட எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் எஸ்1 ஏர் ஸ்கூட்டரை வாங்கியுள்ள நிலையில், கூடுதலாக சில காலம் விலையை தொடர வேண்டும் என வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று சிறப்பு தள்ளுபடி சுதந்திர தினம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
S1 ஏர் ஸ்கூட்டரில் 3kWh பேட்டரி ஆப்ஷனை கொண்டுள்ளது. பொதுவாக, 4.5Kw பவரை வெளிப்படுத்துகின்ற ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் 90KM/hr ஆகும். 0-100% சார்ஜிங் செய்ய அதிகபட்சமாக 4.5 மணி நேரம் தேவைப்படும்.
முழுமையான சிங்கிள் சார்ஜிங் மூலம் அதிகபட்சமாக 125 கிலோ மீட்டர் ரேஞ்சு வழங்கும் என ஓலா தெரிவித்துள்ளது.
S1 ஏர் ஸ்கூட்டரின் பரிமாணங்கள் 1865 மிமீ நீளம், 710 மிமீ அகலம் மற்றும் 1155 மிமீ உயரம் கொண்டுள்ளது. 1385 மிமீ வீல்பேஸ், 792 மிமீ இருக்கை நீளம், 738 மிமீ இருக்கை உயரம், 165 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்ட ஸ்கூட்டரின் கெர்ப் எடை 107 கிலோ மற்றும் பூட் கொள்ளளவு 34 லிட்டர் ஆகும்.