Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

501கிமீ ரேஞ்ச்.., ஓலா எலக்ட்ரிக் ரோட்ஸ்டர் X, X பிளஸ் விற்பனைக்கு வெளியானது.!

by MR.Durai
5 February 2025, 1:01 pm
in Bike News
0
ShareTweetSend

ola roadster x launched

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் வெளியிட்டுள்ள முதல் மின்சார மோட்டார்சைக்கிள் மாடாலான ரோட்ஸ்டர் X மற்றும் ரோட்ஸ்டர் X பிளஸ் டாப் மாடலில் 4.5kWh, 9.1kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்று பாரத் செல் 4680 இடம்பெற்றுள்ளது.

பிரேக் பை வயர் நுட்பத்துடன் கூடிய சிங்கிள் சேனல் ஏபிஎஸ், MoveOS 5, ரிவர்ஸ் மோடு, க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளை அனைத்து மாடலும் பெற்றுள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் மூன்றாம் தலைமுறை ஓலா எஸ்1 ஸ்கூட்டர்களை வெளியிட்டிருந்தது.

Ola RoadSter X+

இந்நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான 4680 பாரத் செல் பெறுகின்ற 9.1kWh பேட்டரி மாடல் அதிகபட்சமாக 11kW பவர் வெளிப்படுத்துகின்ற மோட்டார் பெற்று முழுமையான சிங்கிள் சார்ஜில் 501 கிமீ ரேஞ்ச் வழங்கும் என IDC சான்றிதழ் பெற்றுள்ளது.

4.5kWh  பேட்டரி பெற்ற மாடல் அதிகபட்சமாக 11kW பவர் வெளிப்படுத்துகின்ற மோட்டார் பெற்று முழுமையான சிங்கிள் சார்ஜில் 259 கிமீ ரேஞ்ச் வழங்கும் என IDC சான்றிதழ் பெற்றுள்ளது.

4.3 அங்குல எல்சிடி கிளஸ்ட்டரை பெற்றுள்ள இரு மாடல்களும் 0-40 கிமீ வேகத்தை எட்ட 2.7 விநாடிகள் எடுத்துக் கொள்ளும் நிலையில், அதிகபட்ச வேகம் மணிக்கு 125 கிமீ ஆக உள்ள நிலையில், ஹைப்பர், ஸ்போர்ட்ஸ், நார்மல் மற்றும் ஈக்கோ என 4 ரைடிங் மோடுகளுடன் ரிவர்ஸ் மோடு, க்ரூஸ் கண்ட்ரோல் உடன் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் பெற்றுள்ளது.

  • Ola Roadster X+ 4.5Kwh – ₹ 1,04,999
  • Ola Roadster X+ 9.1Kwh – ₹ 1,54,999

Ola RoadSter X

ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்கில் 2.5kWh, 3.5kWh மற்றும் 4.5kWh என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷனை கொண்டுள்ளது. ஆரம்ப நிலை 2.5kWh பேட்டரி பெற்ற மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 105 கிமீ கொண்டு இதன் IDC ரேஞ்ச் 144 கிமீ ஆக உள்ளது.

3.5kWh பேட்டரி பெற்ற மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 118 கிமீ கொண்டு இதன் IDC ரேஞ்ச் 201 கிமீ ஆக உள்ளது.

4.5kWh பேட்டரி பெற்ற மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 118 கிமீ கொண்டு இதன் IDC ரேஞ்ச் 259 கிமீ ஆக உள்ளது.

ஸ்போர்ட்ஸ், நார்மல் மற்றும் ஈக்கோ என 3 ரைடிங் மோடுகளுடன் ரிவர்ஸ் மோடு, க்ரூஸ் கண்ட்ரோல் உடன் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் பெற்று 4.3 அங்குல எல்சிடி கிளஸ்ட்டரை கொண்டுள்ளது.

  • Ola Roadster X+ 2.5Kwh – ₹ 74,999
  • Ola Roadster X 3.5Kwh – ₹ 84,999
  • Ola Roadster X 4.5Kwh – ₹ 94,999

ரோட்ஸ்டர் பைக்குகளுக்கு 3 ஆண்டுகள்/50,000 கிமீ நிலையான உத்தரவாதத்துடன் வருகிறது. ரோட்ஸ்டருக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதால், விநியோகம் மார்ச் 2025 மத்தியில் இருந்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Motor News

ஓலா ரோட்ஸ்டர் X எலக்ட்ரிக் பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

பிப்ரவரி 5., ரோட்ஸ்டர் X பைக்கை வெளியிடும் ஓலா எலக்ட்ரிக்.!

Tags: Ola Roadster X
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஹீரோ விடாவின் புராஜெக்ட் VXZ ஸ்போர்ட்ஸ் பைக் டீசர் வெளியானது

ஹீரோ விடாவின் புராஜெக்ட் VXZ ஸ்போர்ட்ஸ் பைக் டீசர் வெளியானது

vida ubex concept

ஹீரோ விடா Ubex எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் டீசர் வெளியானது

புதிய அட்வென்ச்சர் சாகாப்தத்தை உருவாக்குமா.! அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300

₹ 1.99 லட்சத்தில் டிவிஎஸ் மோட்டாரின் அப்பாச்சி RTX அட்வென்ச்சர் வெளியானது

நவம்பர் 11ல் யமஹாவின் இந்திய அறிமுகம் யார்..! WR 155 R அல்லது XSR 155..?

டிவிஎஸ் அட்வென்ச்சர் டூரிங் அக்டோபர் 15ல் அறிமுகம்

ஏபிஎஸ் பெற்ற டிவிஎஸ் ரைடர் 125 விற்பனைக்கு வெளியானது

110cc டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்டில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் அறிமுகமானது

125 மில்லியன் ஹீரோ பைக் விற்பனையை கொண்டாடும் சிறப்பு எடிசன் வெளியானது

ஏபிஎஸ் பெற்ற ரைடர் 125 மாடலை வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan