ஓலா நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஜிகாஃபேக்டரியில் தயாரிக்கப்படுகின்ற 4680 செல்களை பெற்ற பேட்டரி பயன்படுத்தப்படுவதனால் S1 Pro + மற்றும் ரோட்ஸ்டெர் X+ 9.1Kwh பைக்கின் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
வரும் செப்ட்ம்பர் 2025 முதல் டெலிவரி துவங்கப்பட உள்ள இந்த இரு மாடலுகளும் அறிமுகத்தின் பொழுது S1 Pro + ரூ. 2 லட்சமாக இருந்த நிலையில் தற்பொழுது ரூ.1.70 லட்சமாகவும், ரோட்ஸ்டெர் X+ 9.1Kwh டாப் வேரியண்ட் ரூ.2.25 லட்சத்திலிருந்து ரூ.1.90 லட்சம் என குறைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் சலுகையாக ஆகஸ்ட் 17, 2025க்குள் S1 Pro+ மற்றும் Roadster X+ முன்பதிவு செய்தால் ரூ.10,000 தள்ளுபடியுடன் வழங்குவதாகவும், மேலும் செப்டம்பர் 22 ஆம் தேதி இரண்டிற்கும் டெலிவரிகளைத் தொடங்குவதாக இந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.
ஏபிஎஸ் பெற்ற 5.3 kWh பேட்டரி பேக் கொண்ட S1 Pro+ மாடல் 320 கிலோமீட்டர் (IDC) வரை, 13 kW மின்சார மோட்டாரைக் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் 0-40 கிமீ வேகத்தை 2.1 வினாடிகளில் எட்டும் என்றும், அதிகபட்ச வேகம் மணிக்கு 141 கிமீ என்றும் கூறப்படுகிறது.
ஓலாவின் ரோட்ஸ்டர் + 9.1Kwh ஆனது 501 கிமீ IDC சான்றிதழ் பெற்று 11 kW பவர் 0-40 கிமீ வேகத்தை 2.7 வினாடிகள் தேவைப்படும் மற்றும் அதிகபட்ச வேகம் மணிக்கு 125 கிமீ ஆக உள்ளது.
ஆகஸ்ட் 15ல் இந்நிறுவனத்தின் உயர் ரக பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தும் டைமண்ட்ஹெட்டின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.