ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக சலுகை ஆக ரூபாய் 84,990 ஆக துவங்குகின்றது.
தினசரி பயன்பாடுகளுக்கு ஏற்ற கம்யூட்டர் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய மாடல்கள் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை கொண்டு மிக சிறப்பான வகையிலான ரேஞ்ச் மற்றும் குறைவான பராமரிப்பு செலவு கொண்டதாக விளங்கும் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது.
இரு மாடல்களும் பொதுவாகவே அடிப்படையான டிசைன் அம்சங்களில் பெரிதாக மாற்றங்கள் இல்லை. மற்றபடி பேட்டரி மற்றும் வசதிகளில் சற்று வித்தியாசப்படுகின்றது.
இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் பெற்று கம்பைண்ட் பிரேக்கிங் சிஸ்டமானது கொண்டிருக்கின்றது. முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர் பின்புறத்தில் ட்வின் சாக் அப்சார்பர் கொண்டுள்ள இந்த மாடலில் கருப்பு மிட்நைட் புளூ, காஸ்மிக் பிளாக் ரெட், டைட்டன் ரெட் சில்வர், பிளாக் நியான் கிரீன் என நான்கு விதமான வண்ணங்கள் கிடைக்கின்றது.
ஆரம்ப நிலை RV1 வேரியண்டில் 2.2 kWh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் ஈக்கோ மோடில் 100 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
RV1+ வேரியண்டில் 3.24 kWh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் ஈக்கோ மோடில் 160 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக RV1+ விரைவு சார்ஜர் மூலம் 1.5 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.
6-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலை 2 ரைடிங் மோடுகளுடன் வழங்குகிறது: Eco மற்றும் City, அத்துடன் ரிவர்ஸ் மோடும் உள்ளது.
(Ex-showroom)
தற்பொழுது முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள இரண்டு மாடல்களும் டெலிவரி அடுத்த பத்து நாட்களில் வழங்கப்பட உள்ளது.