சிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்

rv400

ரிவோல்ட் இன்டெல்லிகார்ப்., ஆர்வி 400 மற்றும் ஆர்வி 300 ஆகிய இரண்டு எலக்ட்ரிக் பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்டுள்ளது. மேலும் சிங்கிள் பேமெண்டில் இந்த பைக்குகளை வாங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

1 லட்சம் ரூபாய்க்கு குறைவான எக்ஸ்ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. ரிவோல்ட் ஆர்வி 400 ரூ .98,999 மற்றும் ஆர்வி 300 ரூ .84,999 (எக்ஸ்ஷோரூம்). கூடுதலாக ஆர்டிஓ பதிவு, வாகன காப்பீடு, மற்றும் மூன்று வருடத்திற்கான 4ஜி ஆதரவு பெற்ற சிம் கார்டினை இயக்குவதற்கு கட்டணம் ரூ.5,000 ஆகியவை வசூலிக்கப்பட உள்ளது.  மை ரிவோல்ட் பிளான் எனப்படுகின்ற மாதந்திர பிளானும் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது.

ரிவோல்ட் ஆர்வி400 பேட்டரி விபரம்

இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி ஆனது பைக்கினில் இருக்கும்போது சார்ஜ் செய்யவோ அல்லது (போர்டெபிள்) பேட்டரியை தனியாக எடுத்தும் சார்ஜ் செய்யும் வகையில் வழங்கப்பட்டு, 15A ஆன் போர்டு சார்ஜர் வாயிலாக பேட்டரியை 4 மணி நேரத்துக்குள் முழுமையான சார்ஜிங் செய்ய இயலும். மேலும் நீங்கள் பயணித்தில் இருக்கும்போது திடீரென பேட்டரி சார்ஜ் குறைவாக இருந்தால், உடனடியாக ரிவோல்ட் ஆப் வாயிலாக அருகில் உள்ள ஸ்வாப் பேட்டரி மையத்தை அனுகினால் உடனடியாக முழுமையான சார்ஜிங் உள்ள மாற்று பேட்டரி வழங்கப்படும். உங்கள் இருப்பிடம் அல்லது நீங்கள் கோரும் இடத்தில் வழங்க ரிவோல்ட் திட்டமிட்டுள்ளது.

ஆர்வி400 மைலேஜ் மற்றும் வேகம்

45 கிமீ வேகத்தில் பயணிக்க ஈக்கோ மோடில் 156 கிமீ பயணம், 65 கிமீ வேகத்தில் பயணிக்க நார்மல் மோடில் அதிகபட்சமாக 100 கிமீ பயணம், மற்றும்  80 கிமீ வேகத்தில் பயணிக்க ஸ்போர்ட் மோடில் அதிகபட்சமாக 80 கிமீ பயணிக்க என மூன்று வகையான மோடுகளை பெற்றிருக்கின்றது.

ஆர்வி400 பைக்கில் உள்ள ஈக்கோ மோடில் பேட்டரி ஆனது முழுமையான சிங்கிள் சார்ஜின் மூலம் அதிகபட்சமாக 156 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வழி வகுக்கும் என இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ARAI) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ரைடர்களை இயக்கும் விதம் மற்றும் சாலையின் தன்மைக்கு ஏற்ப ரேஞ்ச் நிகழ் பயன்பாட்டில் மாறுபடும் என கருதப்படுகின்றது. மேலும், அதிகபட்ச வேகம் மணிக்கு 85 கிமீ ஆக இருக்கும்.

ரிவோல்ட் ஆர்வி 300

அடுத்ததாக குறைந்த ரேஞ்ச் பெற்ற ஆர்வி 300 பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் 1.5kW ஹப் மோட்டார் மற்றும் 2.7kWh பேட்டரி பொருத்தப்பட்டு இதன் வேகன் மணிக்கு 65 கிமீ ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ரேஞ்ச் 85 கிமீ -150 கிமீ ஆகும்.

ஆர்வி 300 பைக்கில் 25 கிமீ வேகத்தில் பயணிக்க ஈக்கோ மோடில் 150 கிமீ பயணம், 45 கிமீ வேகத்தில் பயணிக்க நார்மல் மோடில் அதிகபட்சமாக 100 கிமீ பயணம், மற்றும்  60 கிமீ வேகத்தில் பயணிக்க ஸ்போர்ட் மோடில் அதிகபட்சமாக 80 கிமீ பயணிக்க என மூன்று வகையான மோடுகளை பெற்றிருக்கின்றது. இந்த மாடலில் கிரே மற்றும் பிளாக் என இரு நிறங்கள் பெற்றுள்ளது.

ரிவோல்ட் பைக் விலை பட்டியல்

மின்சார இருசக்கர வாகன சந்தையில் வெளியாகியுள்ள ரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.. அதனை தொடர்ந்து டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதி உட்பட சென்னை, புனே, பெங்களூரு, அகமதாபாத் மற்றும் ஹைத்திராபாத் போன்ற நகரங்களில் அடுத்த நான்கு மாதங்களுக்குள் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

ரிவோல்ட் ஆர்வி 300 மாதந்திர இஎம்ஐ கட்டணம் ரூ.2,999 ஆக 37 மாதங்களுக்கு வசூலிக்கப்பட உள்ளது.

ரிவோல்ட் ஆர்வி 400 மாதந்திர இஎம்ஐ கட்டணம் ரூ.3,499 ஆக 37 மாதங்களுக்கு வசூலிக்கப்பட உள்ளது.

ரிவோல்ட் ஆர்வி 400 பிரீமியம் மாதந்திர இஎம்ஐ கட்டணம் ரூ.3,999 ஆக 37 மாதங்களுக்கு வசூலிக்கப்பட உள்ளது. இந்த பிரீமியம் வேரியண்டில் கூடுதலாக இலவசமாக முதல் மூன்று வருடங்களில் டயர் மட்டும் ஒரு முறை மாற்றித் தரப்படலாம்.

ரிவோல்ட் ஆர்வி 300 விலை ரூ. 1,10, 963

ரிவோல்ட் ஆர்வி 400 விலை ரூ. 1,29,463

ரிவோல்ட் ஆர்வி 400 பிரீமியம் விலை ரூ. 1,47,963

(ஆன்ரோடு விலை)

Exit mobile version