ஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 மின்சார பைக் அறிமுகமானது

ரிவோல்ட் RV400 மின்சார பைக்

இந்தியாவில் மிகவும் ஸ்டைலிஷான ரிவோல்ட் RV400 (Revolt RV400) மின்சார பைக் மாடலை ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஜூன் 25 முதல் அமேசான் மற்றும் ரிவோல்ட் இணையதளம் மூலம் ரூ.1000 செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம். ஜூன் மாதம் ஆர்வி400 பைக் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

பல்வேறு முன்னணி டெக் நிறுவனங்களுடன் இணைந்து ஸ்மார்ட் வசதிகளை வழங்க உள்ள ரிவோல்ட் நிறுவனம், மானசேர் பகுதியில் அமைந்துள்ள ஆலையில் ஆண்டுக்கு 1.20 லட்சம் மோட்டார்சைக்கிள்களை தயாரிக்கும் திறுனுடன் ஆலை உருவாக்கப்பட்டுள்ளது.

ரிவோல்ட் RV400 பைக்

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராகுல் ஷர்மா மூலம் தொடங்கப்பட்டுள்ள, ரிவோல்ட் நிறுவனம் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு திறன் பெற்ற மோட்டார்சைக்கிள் மாடலாக ஆர்வி 400 பைக்கினை அறிமுகம் செய்துள்ளது.

கருப்பு மற்றும் சிவப்பு என இரு நிறங்களில் வந்துள்ள ரிவோல்ட் ஆர்வி400 சிங்கிள் சார்ஜின் மூலம் அதிகபட்சமாக 156 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வழி வகுக்கும் என இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ARAI) தரச்சான்றிதழ் வழங்கப்படுள்ளது. மேலும், அதிகபட்ச வேகம் மணிக்கு 85 கிமீ ஆக இருக்கும்.

ரிவோல்ட் RV400 பைக்

எலெக்ட்ரிக் வாகனங்கள் எவ்விதமான ஒலியும் எழுப்பாது. ஆனால் இந்த மாடலில் செயற்கை முறையான வகையில் ஒலியை எக்ஸ்ஹாஸ்ட் எழுப்பும், மேலும் நமது விருப்பதுக்கு நான்கு வகையான ஒலியை முதற்கட்டமாக வழங்கியுள்ளது. எதிர்காலத்தில் மேலும் கூடுதலான ஒலி எழுப்பும் ஆப்ஷனை வழங்க உள்ளது.

இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு, சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பெற்று முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் கொண்டதாக விளங்க உள்ளது.

156 கிலோ எடை கொண்ட ஆர்வி 400 பைக்கில் முழுமையான எல்இடி ஹெட்லைட், முழு டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர், 4ஜி ஆதரவு கனெக்ட்டிவிட்டி வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் நுட்பத்தின் மூலம், உங்களுடைய ரைடிங் பேட்டர்ன் முறையில் அதற்கு ஏற்ப பேட்டரியின் சார்ஜிங் பராமிப்பினை மேற்கொள்வதுடன், எவ்விதமான கோளாறுகளும் இன்றி பயணத்தை மேற்கொள்ள உதவுகின்றது.

முதற்கட்டமாக டெல்லி நகரிலும் அதனை தொடர்ந்து சென்னை, புனே, தேசிய தலைநகர் பகுதி, பெங்களூரு, அகமதாபாத் மற்றும் ஹைத்திராபாத் போன்ற நகரங்களில் அடுத்த நான்கு மாதங்களுக்குள் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. ஃபேம் இரண்டாம் கட்ட ஊக்கதொகையின் அடிப்பையில் ரூ.1 லட்சம் விலையில் ஆர்வி 400 பைக் விற்பனைக்கு கிடைக்கலாம்.

revolt rv400 bike revolt rv400 bike revolt bike details