Site icon Automobile Tamilan

அறிவிக்கப்பட்டது ராயல் என்பீல்ட் 650 டுவின் ஐரோப்பிய விலை

ராயல் என்பீல்ட் இண்டெர்ஸ்ப்ட்டோர் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார் சைக்கிள் தற்போது அதிக விரும்பு மோட்டார் சைக்கிள் மாறியுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய மார்க்கெட்டில் வெளியானது. 2019 முதல் விற்பனைக்கு வர உள்ள இந்த மோட்டார் சைக்கிள்கள் மூன்று ஆண்டு வாரண்டியுடன் கிடைக்கிறது.

இண்டெர்ஸ்ப்ட்டோர் 650 மோட்டார் சைக்கிள்கள் 6400 யூரோ விலையிலும், கான்டினென்டல் GT 650 மோட்டார் சைக்கிள்கள் 6600 யூரோ விலையிலும் விற்பனையாகிறது. ஆனால் ஸ்பெயின், இத்தாலி மற்றும் போர்ச்சுகல் நாடுகளில் இண்டெர்ஸ்ப்ட்டோர் 650 மோட்டார் சைக்கிள்கள் 6200 யூரோ விலையிலும், கான்டினென்டல் GT 650 மோட்டார் சைக்கிள்கள் 6400 யூரோ விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

ராயல் என்பீல்ட் இண்டெர்ஸ்ப்ட்டோர் 650 மோட்டார் சைக்கிள்களில் ஹேண்டில்பார் மற்றும் தட்டையான சீட்கள் பொருத்தப்பட்டுள்ளது. GT 650 மோட்டார் சைக்கிள்கள், கிளிப் ஆன் ஹேண்டில்பார் மற்றும் சிங்கிள் சீட்களுடன் கபே ரேஸ்ஸர் தோற்றத்தில் வெளியாகியுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும், ஒரே மாதிரியான சேஸ்கள், இன்ஜின், சஸ்பென்ஷன் மற்றும் பிளாக் அவுட் ஸ்போக் ரிம்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கபே ரேஸ்ஸர் மோட்டார் சைக்கிள்களின் பெட்ரோல் டேங்க் 12.5 லிட்டர் அளவிலும், இண்டெர்ஸ்ப்ட்டோர் மோட்டார் சைக்கிள்களின் பெட்ரோல் டேங்க் 13.7 லிட்டர் அளவிலும் இருக்கும். 202kg எடை கொண்ட இண்டெர்ஸ்ப்ட்டோர்கள், கான்டினென்டல் GT-ஐ விட 4kg அதிகமாக இருக்கும்.

மேற்குரிய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் 648cc, பேர்லல் டூவின், ஏர்-கூல்டு, பெட்ரோல் இன்ஜெக்ட்டட் இன்ஜின் கொண்டதாக இருக்கும். இந்த இன்ஜின் 47bhp ஆற்றலில், 52 Nm பீக் டார்க்யூ கொண்டதாக இருக்கும். இந்த இஞ்சின்கள் 6-ஸ்பீட் கியர்பாக்ஸ் மற்றும் சிலிப்பர் கிளட்ச்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்தியாவில் இந்த மோட்டார் சைக்கிள்கள் 3 லட்ச ரூபாய் விலையில் விற்பனை வரும் என்றும். இந்த மோட்டார் சைக்கிள்கள், ஹார்லி-டேவிட்சன் ஸ்ட்ரீட் ராட், கவாசாக்கி வல்கன் எஸ் மற்றும் ஹார்லி-டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மோட்டார் சைக்கிள்களுக்கு போட்டியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version