Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ் காத்திருப்பு காலம் அதிகரிப்பு

Royal Enfield 650 twins

குறைந்த விலையில் 650 சிசி என்ஜின் பெற்ற அற்புதமான ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ் பைக் விற்பனை தொடர்ந்து சீரான வளர்ச்சி அடைந்து வருகின்றது. மேலும் இரு மாடல்களுக்கு ஒரு சில நிறம் மற்றும் வேரிண்ன் வாரியாக நான்கு முதல் ஆறு மாதம் வரை பைக் டெலிவரிக்கு வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

கிளாசிக் 500, ஹிமாலயன் மாடல்களை விட சற்று கூடுதலான விலை அற்புதமான ரெட்ரோ டிசைன் வடிவமைப்பை பெற்ற இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி மாடல்களுக்கு தொடர்ந்து அமோக முன்பதிவு நடைபெற்று வருகின்றது.

ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ் சிறப்புகள்

இந்தியா மட்டுமல்லாமல் தாய்லாந்து, இங்கிலாந்து , ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் 650 ட்வீன்ஸ் பைக்கிற்கு அமோக ஆதரவை பைக் ரசிகர்கள் வழங்கி உள்ளனர். குறிப்பாக இந்திய சந்தையில் இரு மாடல்களுக்கு அதிகபட்சமாக நான்கு முதல் ஆறு மாதம் வரை காத்திருப்பு காலம் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

மேலும், தற்போது என்ஃபீல்டு சைக்கிள் கோ. நிறுவனம் , சென்னை அருகே உள்ள தொழிற்சாலையில் மாதம் 2,500 எண்ணிக்கையில் உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. இதனை இரடிப்பாக்க முயற்சிகை மேற்கொண்டுள்ளது. மேலும் கடந்த பிப்ரவரி 2019-ல் மட்டும் நாடு முழுவதும் சுமார் 1,445 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு பேட்ஜ் இடம்பெற்ற 648சிசி எஞ்சின் அதிகபட்சமாக 47 ஹெச்பி குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகப்படியான 52Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

வகை 648 cc, SOHC, air-cooled, parallel-twin
குதிரைத் திறன் 47 bhp at 7,100 rpm
முறுக்கு விசை 52 Nm at 4,000 rpm
Bore x Stroke 78 mm x 67.8 mm
Compression Ratio 9.5:1
கியர்பாக்ஸ் 6 வேக மேனுவல்
எரிபொருள் வகை ப்யூவல் இன்ஜெக்‌ஷன்
இக்னிஷன் டிஜிட்டல் ஸ்பார்க் இக்னிஷன் – TCI

ராயல் என்ஃபீல்டு ட்வீன்ஸ் விலை பட்டியல்

Interceptor 650 – ரூ. 2.50 லட்சம் முதல் ரூ.2.70 லட்சம்

Continental GT 650 – ரூ. 2.65 லட்சம் முதல் ரூ.2.85 லட்சம்

Exit mobile version