பயன்படுத்தப்பட்ட பழைய பைக் விற்பனை சந்தையில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் REOWN என்ற பெயரில் முதற்கட்டமாக சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, மற்றும் பெங்களூரு ஆகிய பெருநகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நிதி திட்டங்களை வழங்குவதற்காக எச்டிஎஃப்சி & ஐடிஎஃப்சி போன்ற நிதி நிறுவனங்களுடன் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வழங்க உள்ளது.

Royal Enfield Reown

Reown என்ற பெயரில் அனைத்து பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் 200+ தொழில்நுட்ப மற்றும் என்ஜின் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, மோட்டார் சைக்கிள் பாகங்களைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட ஆர்இ சேவை மையங்களில் பழுதுபார்க்கப்பட்டு பிரச்சனைகள் இல்லா பைக்குகளாக விற்பனை செய்யப்பட உள்ளது.

பழைய பைக் வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதம், இரண்டு இலவச சர்வீஸ் கிடைக்கும். தங்களுடைய மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்பவர்களுக்கு, நிறுவனம் லாயல்டி சலுகைகளை வழங்கும். இதில் ரூ.5,000 மதிப்புள்ள உண்மையான ஆக்சஸரீஸ்கள், அவர்களின் அடுத்த ஆர்இ மோட்டார் சைக்கிள் வாங்குவதில் பெறலாம்.

ராயல் என்ஃபீல்டு தலைமை நிர்வாக அதிகாரி B. கோவிந்தராஜன் கூறுகையில், “பயன்படுத்தப்பட்ட சொந்தமான ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் வாங்கும் போது வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் அணுகல் மற்றும் நம்பிக்கையின் சிக்கலைத் தீர்ப்பதற்கான ஒரு முயற்சியாக நாங்கள் REown பார்க்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.