ராயல் என்ஃபீல்டின் நிறுவனத்தின் புதிய ரோட்ஸ்டெர் மோட்டார்சைக்கிள் மாடலாக வெளியிடப்பட்டுள்ள Guerrilla 450 பைக்கின் ஆரம்ப விலை ரூ.2.39 லட்சம் முதல் ரூ.2.54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை அமைந்துள்ளது.
ஏற்கனவே சந்தையில் உள்ள ஹிமாலயன் 450 பைக்கின் அடிப்படையிலிருந்து பெறப்பட்ட என்ஜின் உட்பட சேஸ் என அடிப்படையான பல்வேறு அம்சங்களை பகிர்ந்து கொண்டு தனித்துவமான வடிவமைப்பினை Guerrilla கொண்டுள்ளது.
Sherpa 452cc என்ஜின் பொருத்தப்பட்ட Guerrilla மாடலில் சிங்கிள் சிலிண்டர் 4 வால்வுகளுடன் கூடிய DOHC லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000rpm-ல் 40.02 ps பவர் மற்றும் 5,500rpm-ல் 40 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் இடம்பெற்றுள்ளது.
முன்புறத்தில் 43mm டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் லிக்ங்டூவகை மோனோஷாக் அப்சார் கொண்ட ஸ்விங்கார்ம் இடம்பெற்றுள்ளது. சியட் நிறுவனத்தின் பிரத்தியேகமாக முன்புறத்தில் 120/70-R17 மற்றும் பின்புறத்தில் மிகவும் அகலமான 160/60-R17 ட்யூப்லெஸ் டயர் கொடுக்கப்பட்டு, இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் உடன் டூயல் சேனல் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.
கொரில்லா 450 பைக்கில் ப்ரேவ் ப்ளூ, மஞ்சள் ரிப்பன், பிளேயா கருப்பு,கோல்டு டிப் மற்றும் சில்வர் என மொத்தமாக 5 நிறங்களில் கிடைக்கின்றது.
மேலும் படிக்க ;- Guerrilla 450 வேரியண்ட் விபரம்
இரண்டு பைக்குகளும் பொதுவாக ஒரே என்ஜினை பகிர்ந்து கொண்டாலும் கொரில்லா 450 மாடலுக்கான என்ஜின் ட்யூன் வேறு மாதிரியாக மாற்றப்பட்டு, பின்புற செயின் ஸ்ப்ராக்கெட்டில் ஹிமாலயனை (Himalayan Sprocket 15/47 மற்றும் Guerrilla Sprocket 15/45) விட 2 பற்கள் குறைவாக உள்ளது.
கொரில்லா 450 ஸ்டீல் ஃப்ரேம் சேஸ் பெற்று முன்புறத்தில் 43 மிமீ டெலிஸ்கோபிக் போர்க் (140 மிமீ டிராவல்) மற்றும் லிங்க்டூ மோனோஷாக் (150 மிமீ வீல் டிராவல்) ஆகியவற்றைப் பெறுகிறது. ஹிமாலயன் 450 பைக்கில் இரட்டை-ஸ்பார் சேஸ் பெற்று 43 மிமீ USD ஃபோர்க் (200 மிமீ டிராவல்) மற்றும் லிங்க்டூ மோனோஷாக் (200 மிமீ டிராவல்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
கெரில்லா 17-இன்ச் அலாய் வீல்களில் சவாரி செய்கிறது, 120-பிரிவு முன் மற்றும் 160-பிரிவு பின்புற என இரண்டும் டியூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அட்வென்ச்சர் ரக மறுபுறம், 21-இன்ச் முன் மற்றும் 17-இன்ச் ரியர் ஸ்போக் வீல்களைப் பெறுகிறது, 90-பிரிவு முன் மற்றும் 140-பிரிவு பின்புற டியூப் டயர்களுடன் உள்ளது.
கொரில்லா 450-யின் பரிமாணங்கள் நீளம் 2,090mm அகலம் 833mm மற்றும் உயரம் 1,125mm . அடுத்து வீல்பேஸ் 1,440mm மற்றும் 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் உடன் கெர்ப் எடை வெறும் 174 கிலோ கிராம் கொண்டுள்ள பைக்கில் இருக்கை உயரம் 780mm ஆக உள்ளது.
ஹிமாலயன் 450 பைக்கின் பரிமாணங்கள் நீளம் 2,245mm அகலம் 852mm மற்றும் உயரம் 1,316mm . அடுத்து வீல்பேஸ் 1510mm மற்றும் 17 லிட்டர் பெட்ரோல் டேங்க் உடன் கெர்ப் எடை வெறும் 196 கிலோ கிராம் கொண்டுள்ள பைக்கில் இருக்கை உயரம் 825mm ஆகவும் அட்ஜெஸ்ட் செய்யும் பொழுது 845mm ஆக உயர்த்தலாம்.
ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை ரூ.2.90 லட்சம் முதல் ரூ.3.07 லட்சம் வரை அமைந்துள்ளது.
Guerrilla 450 | EX-SHOWROOM | ON-ROAD PRICE |
---|---|---|
Anlog (Smoke,Playa Black) | ₹.2,39,000 | ₹.2,89,686 |
Dash (Playa Black, Gold Dip) | ₹2,49,000 | ₹.3,00,833 |
Flash (Playa Black, yellow Ribbon) | ₹.2,54,000 | ₹.3,06,584 |
கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஆன்-ரோடு விலையில் எவ்விதமான கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்படவில்லை. விலை டீலர்கள் மற்றும் ஆக்செரீஸ் சேர்க்கப்படும் பொழுது மாறுபடலாம்.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…
அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…
வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…
ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…
இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…
சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…