ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் படங்கள் கசிந்தது

450cc என்ஜின் கொண்ட முதல் பைக் மாடல் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஹிமாலயன் 450 அட்வென்ச்சர் ஸ்டைல் பெற்றதாக அறிமுகம் செய்ய உள்ள நிலையில் சாலை சோதனை ஓட்ட படங்கள் மீண்டும் கசிந்துள்ளது.

முன்பக்கத்தில், எல்இடி ஹெட்லைட்  ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில் உள்ளதை போன்றே ஹிமாலயன் 450 பைக்கில் இருப்பதைக் காணலாம். இந்த மாடலில்  21-இன்ச் வயர்-ஸ்போக் வீல், சியட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆஃப்ரோடு டியூப்-வகை டயருடன் சோதனை ஓட்டத்தில் உள்ளது.

பக்கவாட்டில், ராயல் என்ஃபீல்டின் புதிய லிக்யூடு கூல்டு என்ஜின் முழுமையான கருமையான நிறத்தை பெற்ற சிலிண்டர் கொண்டுள்ளது. சமீபத்திய ராயல் என்ஃபீல்டு பைக்குகளிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட என்ஜின் சிறப்பான பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்தும் என தெரிய வருகின்றது.

புதிய ஸ்விட்ச்கியர் கொண்டுள்ள இந்த பைக்கில் தற்போது விற்பனையில் உள்ள எந்த ராயல் என்ஃபீல்டு பைக்கிலும் இல்லை. ரோட்டரி கில் சுவிட்சின் கீழே ஒரு சிறிய பொத்தான் உள்ளது. இந்த பொத்தான் அனேகமாக  ரைடிங் மோடு அல்லது பின்புற ஏபிஎஸ் செயலிழக்க வாய்ப்புள்ளது.

புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கில் பல்வேறு எலக்ட்ரானிக் சார்ந்த அம்சங்களை வழங்குகின்ற டிஜிட்டல் கிளஸ்ட்டரில் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் புளூடூத் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை எதிர்பார்க்கப்படுகிறது.

image source – powerdrift

Share