ராயல் என்ஃபீல்டு ஜென்டில்மேன் பிராட் அறிமுகம்..!

ராயல் என்ஃபீலடு நிறுவனத்தின் புதிய கஸ்டமைஸ் பைக்குகளாக ஹிமாலயன் ஜென்டில்மேன் பிராட் மற்றும் சர்ஃப் ரேஸர் என இரு மாடல்கள் பிரான்சில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கஸ்டம் பைக்குகளை ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு ஜென்டில்மேன் பிராட்

2017 வீல்ஸ் அன்ட் வேவ்ஸ் விழா பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற பொழுது இரு கஸ்டமைஸ் மாடல்களை சென்னையை சேர்ந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஒரு மாடல் கான்டினென்டினல் GT மாடலை அடிப்படையாக கொண்ட ஜென்டில்மேன் பிரேட் மற்றும் சர்ஃப் ரேஸர் ஆகும்.

இங்கிலாந்தைச் சேர்ந்த சின்ரோஜா (Sinroja) மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் துனையுடன் மிக நேர்த்தியாக இரு மாடல்களும் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது.

ஹிமாலயன் அட்வென்சசர் ரகத்தில் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ள ஜென்டில்மேன் பிராட் கஸ்டமைஸ் பைக்கில் வெள்ளை வண்ணத்துடன் மிக நேர்த்தியாக இணைக்கப்பட்டுள்ள கிரே பூச்சினை பெற்றுள்ள இந்த மாடலில் 16 அங்குல வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பழமையான தோற்றத்தை நினைவுகூறும் வகையிலான வட்ட வடிவ முகப்பு விளக்குகளுடன் , சொகுசு தன்மையை வெளிப்படுத்தும் வகையில் லெதர் இருக்கை, மெசினிங் செய்யப்பட்ட அலமினியம் பாகங்களை பெற்று ஆடம்பரமாக காட்சி அளிக்கின்றது. இந்த பைக்கில் ஹிமாலயன் மாடலில் இடம்பெற்றுள்ள 411 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Royal Enfield Himalayan Gentleman Brat gallery

 

Exit mobile version