Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட் பைக் விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
January 12, 2018
in பைக் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

royal enfield himalayan sleet editionராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், இந்தியாவில் சிறப்பு ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட் அட்வென்ச்சர் ரக பைக் மாடலை ரூ.2,12,666 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹிமாலயன் ஸ்லீட் 500 எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட்

royal enfield himalayan sleet edition side view

சாதாரன மாடலை விட ரூ.28,000 வரை கூடுதலான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள என்ஃபீல்டு ஸ்லீட் https://royalenfield.com இணையதளத்தில் மட்டும் பிரத்தியேகமாக ஜனவரி 12, 2018 முதல் ரூ.5000 கொண்டு முன்பதிவு தொடங்கப்பட்டு 500 பைக்குகள் மட்டுமே இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட உள்ளது.

முதலில் வருபவர்களுக்கு முதலில் கிடைக்கும் என்பதின் அடிப்பையில் விற்பனை செய்யப்பட உள்ள ஹாமலயன் ஸ்லீட் மாடலில் புதிய வண்ணத்தை தவிர கூடுதலாக ஸ்லீட் எக்ஸ்புளோரர் கிட் இணைக்கப்பட்டுள்ளது.  ஸ்லீட் எக்ஸ்புளோரர் கிட் இணைக்கப்பட்ட மாடல்கள் ஜனவரி 30, 2018 முதல் டெலிவரி தொடங்கப்பட உள்ளது.

தோற்ற அமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் பெறாமல் கூடுதலாக வழங்கப்பட்டுள்ள ஸ்லீட் எக்ஸ்புளோரர் கிட்டில் உள்ள அம்சங்களை தொடர்ந்து காணலாம்.

royal enfield himalayan sleet edition side

1 . 26 லிட்டர் கொள்ளளவு கொண்ட அலுமினியம் பெட்டிகள்

2. பெட்டிகளுடன் கூடிய ரெயில்கள்

3. ஆஃப் ரோடுஸ்டைல் பெற்ற அலுமினியம் ஹெண்டில் பாருடன் கூடிய கிராஸ் ப்ரோஸ் உடன் பார் ஹேண்டில் வெயிட் இடம்பெற்றுள்ளது.

4. எஞ்சின் கார்டில் பவுடர் கோட்டிங் பூச்சு

5. ஸ்லீட் எடிசனுக்கு 2 வருட வாரண்டி வழங்கப்பட்டுள்ளது.

royal enfield himalayan sleet edition rear

இந்த பைக்கில் எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லாமல், ஃப்யூவல் இன்ஜெக்‌ஷனுடன் பெற்ற 24.5 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 411 சிசி லாங்க் ஸ்டோர்க் எஞ்சின் 32 என்எம் டார்க் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட் எடிசன் விலை ரூ. 2,12,666 (ஆன்-ரோடு சென்னை)

Tags: Himalayan Sleet Editionஹிமாலயன் பைக்ஹிமாலயன் ஸ்லீட்
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan