முன்பாக ரைடர் மேனியா என அழைக்கப்பட்டு வந்த நிகழ்ச்சி ராயல் என்ஃபீல்டு மோட்டோவெர்ஸ் 2023 என பெயரிடப்பட்டு நவம்பர் 24-26 வரை கோவா வகடோர் பீச்சில் நடைபெறுகின்றது. புதிய ஹிமாலயன் 450 பைக்கின் விலை இந்த நிகழ்வில் அறிவிக்கப்பட உள்ளது.
ராயல் என்ஃபீல்டு மோட்டோவெர்ஸ் 2023 நிகழ்வுக்கான பதிவுகள் இந்நிறுவன இணையதளத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஒரு நபருக்கான கட்டணம் ரூ.3,500 ஆக வசூலிக்கப்படுகின்றது.
Royal Enfield Motoverse 2023
உலகம் முழுவதிலுமிருந்து ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள் ஒன்று கூடுகின்ற நிகழ்வில் டர்ட் ட்ராக் பந்தயங்கள், இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள், உணவு, பானங்கள், நிபுணர் அமர்வு மற்றும் பலவேறு மோட்டார் துறை சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
செட் பில்டு என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள தனிநபர்களிடமிருந்து இருந்து பெறப்பட்ட சிறந்த வடிவமைப்பினை கொண்ட வித்தியாசமான 23 கஸ்டமைஸ்டு பைக்குளை பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
மிக சுவாரஸ்யமாக பல்வேறு டர்ட், அட்வென்ச்சர் சாகசங்களை மேற்கொள்ளும் வகையிலான அரங்கம் என்பதனால் மோட்டார்சைக்கிள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இந்த நிகழ்ச்சி அமைய உள்ளது.
மிக முக்கியமாக, 2023 மோட்டோவெர்ஸ் அரங்கில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 அட்வென்ச்சர் டூரிங் பைக்கின் விலை அறிவிக்கப்பட உள்ளது. தற்பொழுது இந்த மாடலுக்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது.