Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

விரைவில்.., ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411 விற்பனைக்கு அறிமுகம்

by automobiletamilan
February 11, 2022
in பைக் செய்திகள்

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற அட்வென்ச்சர் ஸ்டைல் மாடலான ஹிமாலயன் பைக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய ஸ்கிராம் 411 மாடலை பொருத்தவரை விற்பனைக்கு அடுத்த சில வாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹிமாலயன் மாடலை விட ரூபாய் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விலை குறைவாக எதிர்பார்க்கப்படுகின்றது மிகவும் நேர்த்தியான ஆன்ரோடு அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும்.

ராயல் என்ஃபீல்டு Scram 411

தோற்ற அமைப்பினை பொறுத்தவரை ஹிமாலயனில் இருந்து பல்வேறு மாறுபாடுகள் கொண்டு உள்ளது. குறிப்பாக முகப்பு ஹெட்லைட்டில் சிறிய மாற்றம் உட்பட மேலும் பெட்ரோல் டேங்க் அடிப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள பேணல், இருக்கையில் சிறிய மாற்றம் மற்றும் பக்கவாட்டு பேனல் போன்றவைகள் இந்த மாடலுக்கு புதுப்பிக்கப்படடுள்ளது. மேலும் முன்புறம் வீல் 19 அங்குலமாக (21 இன்ச் ஹிமாலயன்) குறைக்கப்பட்டுள்ளது.

மிக முக்கியமான மற்றொரு மாற்றமாக இந்த மாடலுக்கு கிரவுண்ட் கிளியரன்ஸ் 200 மில்லி மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. ஹிமாலயன் மாடலை பொருத்தவரை 220 மில்லிமீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றுள்ளது. முன்புறத்தில் வின்ட் ஸ்கிரீன் பின்புறத்தில் லக்கேஜ் வைப்பதற்கான ரேக் நீக்கப்பட்டுள்ளது. முன்புற ஃபென்டர் மாற்றப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411 பைக்கில் 6,500 rpm -யில் 24.3 ஹெச்பி பவர், 4,000-4,500 rpm -யில் அதிகபட்சமாக டார்க் 32 என்எம் வெளிப்படுத்தும் 411 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.

விற்பனைக்கு அடுத்த சில வாரங்களுக்குள் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாடலின் விலையானது தற்பொழுது விற்பனையில் உள்ள விட குறைவாக இருக்கும் என்பதால் புதிய ராயல் என்பீல்ட் ஸ்கிராம் பைக்கின் விலை அனேகமாக ரூபாய் 2 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Tags: Royal Enfield Himalayan Scram 411
Previous Post

ஸ்கோடா ஸ்லாவியா அறிமுக தேதி வெளியானது

Next Post

புதிய மாருதி சுசூகி பலேனோ எதிர்பார்ப்புகள்..?

Next Post

புதிய மாருதி சுசூகி பலேனோ எதிர்பார்ப்புகள்..?

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version