Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 350 சோதனை ஓட்ட படங்கள்

royal enfield bobber 350

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், தொடர்ந்து பல்வேறு புதிய மோட்டார்சைக்கிள்களை சோதனை செய்து வருகின்ற நிலையில் பாபர் ஸ்டைலை பெற்ற ஷாட்கன் 350 படங்கள் வெளியாகியுள்ளது.

பாபர் ரக ஸ்டைலை பெற்ற ஷாட்கன் 650 மற்றும் ஷாட்கன் 350 மாடல்கள் கடந்த சில மாதங்களாகவே சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வரும் நிலையில் புதிய படங்கள் வெளியாகியுள்ளது.

RE Shotgun 350

விற்பனையில் உள்ள கிளாசிக் 350 பைக்கில் இடம்பெற்றுள்ள புதிய J சீரிஸ் என்ஜின் பெற உள்ள புதிய ஷாட்கன் மாடல் 349 cc சிங்கிள்-சிலிண்டர் OHC ஏர் மற்றும் ஆயில் கூல்டு எஞ்சினுடன் 6,100 rpm-ல் 20.2 PS பவர், 4,000 rpm இல் 27 Nm டார்க் வழங்குகின்றது. மேலும் இதில் ஐந்து வேக டிரான்ஸ்மிஷன் கொண்டதாக வரக்கூடும்.

மாறுபட்ட ஹேண்டில் பார், வெள்ளை நிற சைடு வால் பெற்ற டயர், சூப்பர் மீட்டியோ 650 பைக்கில் உள்ளதை போல எல்இடி ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. மிக நேர்த்தியான எக்ஸ்ஹாஸ்ட் சப்தம் கொண்டதாக அமைந்துள்ளது.

சோதனை ஓட்டத்தில் உள்ள புதிய பாபர் 350 மாடல் உற்பத்திக்கு அடுத்த ஆண்டு தயாராகும் என எதிர்பார்க்கப்படுவதனால் 2024-ல் விற்பனைக்கு வரக்கூடும்.

மேலும் படிக்க – ராயல் என்ஃபீல்டு புல்லட் 350  அறிமுக விபரம்

image source – instagram/bunnypunia

Exit mobile version