Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

by automobiletamilan
July 2, 2018
in பைக் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

இந்தியாவின் முதல் மேக்ஸி ஸ்கூட்டர் மாடலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் ஜூலை 19ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர்

தற்போது அப்ரிலியா SR125,  டிவிஎஸ் என்டார்க் 125 போன்ற மாடல்களுடன் நேரடியான போட்டியை எதிர்கொள்வதுடன் ஹோண்டா கிரேஸியா மற்றும் வரவுள்ள 125சிசி ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டூயட் ஆகிய மாடல்களை பர்க்மென் ஸ்கூட்டர் எதிர்கொள்ள உள்ளது.

சர்வதேச அளவில் பர்க்மேன் 125சிசி , 150சிசி, 200சிசி, 400சிசி மற்றும் 650சிசி ஆகிய மாடல்களில் விற்பனை செய்ப்படுகின்ற நிலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரின் எஞ்சினை பர்க்மேன் பகிர்ந்து கொண்டு மிக அகலமான முன்புற அப்ரானை பெற்று  வின்ட்ஸ்கீரின் கொண்டதாக வரவுள்ளது.

8.5 பிஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 124.3 cc எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 10.2 Nm  இழுவைத் திறனை பெற்றதாக பொருத்தப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன் ஒற்றை சாக் அப்சார்பரை பின்புறத்தில் பெற்றிருக்கலாம்.

இந்த ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் அகலமான இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர், ட்யூப்லெஸ் டயர் உள்ளிட்ட அம்சங்களை பெற்றதாக அமைந்திருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுசூகி பர்க்மென் ஸ்கூட்டர் 125 விலை ரூ. 73,000 ஆக அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஜூலை முதல் வாரத்தில் பர்க்மேன் அறிமுகம் செய்யப்படலாம். சமீபத்தில் இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு டீலர்கள் வாயிலாக ரூ. 5000 செலுத்தி மேற்கொள்ளலாம். இந்நிலையில் ஜூலை 19ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

மேலும் படிக்க – சுசூகி பர்க்மென் ஸ்டீரிட் ஸ்கூட்டர் பற்றி அறிய வேண்டியவை

 

Tags: Suzuki Burgman street 125Suzuki Scooterசுசூகி பர்க்மேன்சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர்
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan