சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகம் செய்யப்பட உள்ள E-அக்சஸ் விலை அனேகமாக அடுத்த சில வாரங்களுக்குள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், போட்டியாளர்களான விடா VX2, வரவிருக்கும் டிவிஎஸ் ஆர்பிட்டர், ஐக்யூப், சேட்டக் 3001, ஓலா, ஹோண்டா QC1, ஆக்டிவா e உள்ளிட்ட பல்வேறு மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.
குறிப்பாக இ-அக்சஸ் நுட்பவிபரங்களின் அடிப்படையில் முழுமையான சார்ஜில் 91 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என கூறப்பட்டுள்ள நிலையில், 3.07 kWH LFP பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்ச பவர் 4.1 Kw மற்றும் 15 Nm டார்க் வெளிப்படுத்தும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மணிக்கு அதிகபட்ச வேகம் 71 கிமீ ஆகவும், 600-watt சார்ஜரை கொண்டு 0-80 % சார்ஜிங் ஏறுவதற்கு 4.30 மணி நேரமும், 0-100 % எட்டுவதற்கு 6.7 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். மிக வேகமான சார்ஜிங் பயன்படுத்தினால் 2 மணி நேரம் 12 நிமிடங்கள் போதுமானதாகும்.
பூட் வசதி வெறும் 17 லிட்டர் மட்டும் கொடுக்கப்பட்டு டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களுடன் இரு பக்கத்திலும் 12 அங்குல வீல் கொண்டு டிஸ்க் பிரேக் பெற்று சஸ்பென்ஷன் அமைப்பில் டெலிஸ்கோபிக் மற்றும் பின்புறத்தில் காயில் ஸ்பீரிங் சஸ்பென்ஷன் உள்ளது.
வழக்கமான மற்ற வசதிகளை கடந்து Eco, Ride A, Ride B என மூன்று ரைடிங் மோடில் மாறுபட்ட செயல்திறன் வெளியீடு ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சார்ந்த செயல்பாடுகளில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக Ride B மோடில் அதிகபட்ச வேகத்தை எட்டுவதுடன் பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு இணையான செயல்திறனை கொண்டுள்ளது.
பல்வேறு வசதிகளை பெற்றாலும் போட்டியாளர்களை விட மிக குறைந்த ரேஞ்ச் மிகப்பெரும் பின்னடைவாக இருக்கலாம், கூடுதல் விலை அமைந்தால் நிச்சியமாக ஹோண்டாவின் ஆக்டிவா இ மற்றும் க்யூசி1 போல விற்பனையில் குறைந்த எண்ணிக்கையை பதிவு செய்யலாம்.
ரூ.1 லட்சத்துக்குள் விலை அமைந்தால் சுசுகி இ-அக்சஸ் கவனிக்கவேண்டிய மாடலாக அமையலாம், ரைடிங், வசதிகள் மற்றும் பவர் வெளியீடு சிறப்பாக இருந்தாலும் ஈக்கோ மோடில் மணிக்கு 55 கிமீ வேகத்துக்கும் குறைவாக பயணித்தால் ரேஞ்ச் தோராயமாக 70-75 கிமீ வரை கிடைக்கலாம்.
பூட் ஸ்பேஸ் போட்டியாளர்கள் 30 முதல் 35 லிட்டர் வழங்கி வரும் நிலையில் 17 லிட்டர் மட்டுமே கொண்டுள்ளது, மற்றபடி சுசுகி தரமான பாகங்கள், உயர்தரமான நுட்பங்களை கொண்டிருக்கும் என்பதனால் தரம் சிறப்பானதாக அமையலாம்.
இ-அக்சஸ் விலையை தாண்டி மற்றொரு கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் இந்நிறுவனம் பயன்படுத்தியுள்ள LFP பேட்டரி (Lithium Ferrous Phosphate), போட்டியாளர்களிடம் உள்ள வழக்கமான NMC (Nickel Cobalt Manganese) பேட்டரிகளை கடந்து கூடுதல் ஆயுள் மற்றும் பாதுகாப்பு பெற்றாலும், ஆற்றலை சேமித்து வைப்பதில் பின்னடைவை சந்திப்பதனால், ரேஞ்ச் குறைவாக உள்ளது.
இ அக்சஸ் வாங்க சில காரணங்கள்
- LFP பேட்டரி
- ஜப்பானிய தரம்
- ரைட் மோடுகள்
- 4.2 TFT கிளஸ்ட்டர்
- விரைவு சார்ஜிங்
தவிர்க்க சில காரணங்கள்
- விலை அறிவிக்கப்படவில்லை, ஆனால் ரூ.1.20 லட்சத்துக்கும் கூடுதலாக அமைந்தால் தவிரக்கலாம்.
- குறைந்த ரேஞ்ச்
- பூட் ஸ்பேஸ்
- போட்டியாளர்கள் பலரும் 100 கிமீ ரேஞ்ச் வழங்கும் மாடல்களை பெற்றுள்ளனர்.