Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Font ResizerAa
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Have an existing account? Sign In
Follow US
Bike News

91கிமீ ரேஞ்ச்.., சுசூகி இ ஆக்செஸ் ஸ்கூட்டரின் விற்பனைக்கு எப்பொழுது.?

ரூ.1.30 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற சுசூகியின் எலெக்ட்ரிக் ஆக்செஸ் ஸ்கூட்டரின் அறிமுகம் அடுத்த மூன்று மாதங்களுக்குள் மேற்கொள்ளப்படலாம்.

By
ராஜா
Byராஜா
நான் ராஜா (BHP Raja) ஆட்டோமொபைல் என்ஜினியரிங் படித்துள்ளேன். கடந்த ஒரு ஆண்டாக புதிய மின்வாகன செய்திகள் மற்றும் விமர்சனம் பற்றி ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் எழுதி வருகிறேன்.
Follow:
Last updated: 21,April 2025
Share
2 Min Read
SHARE
Highlights
  • இ-ஆக்செஸ் ஸ்கூட்டர் 4.1 Kw பவர் மற்றும் 15 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது
  • eco, Ride A, மற்றும் Ride B என மூன்று ரைடிங் மோடுகளை பெற்றுள்ளது.
  • ரிவர்ஸ் மோடு, கீலெஸ் இக்னிஷன் வசதியும் உள்ளது.

சுசூகி இ ஆக்செஸ்

இந்தியாவில் சுசூகி மோட்டார்சைக்கிள் வெளியிட உள்ள முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான இ ஆக்செஸ் (e-Access) மாடலினை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் விற்பனைக்கு அடுத்த மூன்று மாதங்களுக்குள் எதிர்பார்க்கப்படுகின்றது.

 Suzuki e-Access

இந்தியாவில் இ ஆக்செஸ் என்ற பெயரிலும் சர்வதேச அளவில் சில நாடுகளில் இ அட்ரஸ் என்ற பெயரிலும் விற்பனை செய்யப்பட உள்ள இ-ஸ்கூட்டரில் 3.07 kWH LFP பொருத்தப்பட்டு அதிகபட்ச பவர் 4.1 Kw மற்றும் 15 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 91 கிமீ ரேஞ்ச் (WMTC 87KM) வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகபட்ச வேகம் மணிக்கு 71 கிமீ ஆக வரையறுக்கப்பட்டு 0-80 % சார்ஜிங் ஏறுவதற்கு 4.30 மணி நேரமும், 0-100 % எட்டுவதற்கு 6.7 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Suzuki e access boot space and headlight

இருபக்கத்திலும் 12 அங்குல வீல் பெற்று 1305 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ள எலெக்ட்ரிக் ஆக்செஸ் மாடலில் முன்புறத்தில் 90/90-12 54J மற்றும் பின்புறத்தில் 100/80-12 56J ட்யூப்லெஸ் டயருடன் முன்புறத்தில் 190 மிமீ டிஸ்க் மற்றும் 130 மிமீ டிரம் பிரேக்குடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்று, டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ஒற்றை காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது.

4.2 அங்குல TFT டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெறுகின்ற இ ஆக்செஸ் மாடலில் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களுடன் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், கீலெஸ் இக்னிஷன், eco, Ride A, மற்றும் Ride B என மூன்று ரைடிங் மோடுகளுடன் ரிவர்ஸ் மோடும், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் மற்றும் 17 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. மெட்டாலிக் மேட் பிளாக் 2, பேர்ல் கிரேஸ் ஒயிட், மற்றும் பேர்ல் ஜேட் கிரீன் என மூன்று நிறங்களை பெற்றுள்ளது.

More Auto News

ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 விற்பனைக்கு வெளியானது
hero electric ae-47: 160 கிமீ ரேஞ்சு .., ஹீரோ எலெக்ட்ரிக் AE-47 மின்சார பைக் அறிமுகம்
பிஎஸ்-6 மஹிந்திரா மோஜோ பைக்கின் விலை கசிந்தது
டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ABS FI டீசர் வெளியானது
பல்சர் 200ஏஎஸ் பைக் விற்பனைக்கு வந்தது – முழுவிபரம்

இந்தியாவில் மார்ச் 2025ல் உற்பத்தி துவங்கப்பட்டு, ஏப்ரல் 2025ல் விற்பனைக்கு வரவுள்ள சுசூகி இ அக்செஸ் விலை ரூ.1.30 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Suzuki e access scooter

Suzuki e access Pearl Jade Green
Suzuki e access Metallic Mat Black 2
Suzuki e access pearl grace white
Suzuki e access scooter
Suzuki e access boot space and headlight
சுசூகி இ ஆக்செஸ்
ஹீரோ ஐஸ்மார்ட் பைக்குகளின் அதிரடி ஆரம்பம்
ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக் விற்பனைக்கு வந்தது
ஹீரோ ஜூம் 160, ஜூம் 125ஆர் விற்பனைக்கு எப்பொழுது.?
2023 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T பைக் டீசர் வெளியானது
பெர்ஃபாமென்ஸ் ரக டிவிஎஸ் என்டார்க் SXR வெளியானது
TAGGED:Suzuki E Access
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 Royal Enfield Guerrilla 450 new
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
new Royal Enfield classic 650 bike front
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Automobile Tamilan - All Rights Reserved
2025 Automobile Tamilan - All Rights Reserved