சுசூகி e-பர்க்மேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விபரம் வெளியானது

suzuki electric Burgman scooter

சுசூகி மோட்டார் நிறுவனம் 44 கிமீ ரேஞ்சு வழங்கும் வகையில் e-பர்க்மேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. தற்பொழுது வெளியாகியுள்ள அதிகார்ப்பூர்வ விபரங்கள் ஜப்பான் நாட்டில் சோதனை ஓட்டத்தில் உள்ள மாடலாகும்.

சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள மின்சார இரு சக்கர வாகனங்களின்  இ-பர்க்மேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முதல் அதிகாரப்பூர்வ படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் வாயிலாக இந்தியாவில் ஏற்கனவே சாலை சோதனையில் இருந்த மாடலை போலவே இ-பர்க்மேன் இப்போது டோக்கியோ ஜப்பானில் மேம்பட்ட சோதனை ஓட்டத்தில் உள்ளது.

Suzuki e-Burgman

இ-பர்க்மேன் மாடலில் இலகுவாக மாற்றக்கூடிய பேட்டரி பேக் கொண்டுள்ளது.  மாற்றக்கூடிய லித்தியம்-அயன் பேட்டரியின் திறன் பற்றி தற்பொழுது வெளியிடப்படவிலை. சுஸுகி e-பர்க்மேன் ” தட்டையான மேற்பரப்பில் தொடர்ந்து நிலையாக 60 கிமீ வேகத்தில் ஓட்டும் பொழுது சிங்கிள் சார்ஜில் 44 கிமீ” பயண வரம்பை கொண்டிருக்கும் என கூறுகிறது. இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகத் தோன்றினாலும், உற்பத்தி நிலை மாடல் விற்பனைக்கு வரும்பொழுது கூடுதல் ரேஞ்சு மற்றும் அதிகபட்ச வேகம் சற்று உயரக்கூடும்.

e-Burgman மாடலில் பொருத்தப்பட உள்ள மோட்டார் 4kW என்ற அதிகபட்ச சக்தியை வெளிப்படுத்தும் மற்றும் டார்க் 18 Nm என என சுசூகி உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் ஸ்கூட்டரின் எடை மிக அதிகமாக 147 கிலோ என உறுதியாகியுள்ளது. இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட உள்ள லித்தியம் ஐயன் பேட்டரி விபரத்தை வெளியிடவில்லை.

இலகுவாக மாற்றிக் கொள்ளும் வகையிலான பேட்டரி என்பதனால் ஜப்பானில் ஹோண்டா மொபைல் பவர் பேக் e பேட்டரி மாற்றும் மையங்களில் மாற்றிக் கொள்ளலாம். இந்தியாவில் ஹோண்டா எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தனது ஸ்வாப்பிங் நுட்பத்தை கொண்டு வரவுள்ளதால் சுசூகி நிறுவனமும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதிய இ-பர்க்மேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அடுத்த ஆண்டு எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா தனது மின் ஸ்கூட்டர் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வெளியிட உள்ளது.

Exit mobile version