ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை அறிமுக செய்ய உள்ள நிலையில் எதிர்கால திட்டங்கள் மற்றும் ஆக்டிவா பேட்டரி ஸ்கூட்டர் உட்பட மற்றொரு ஸ்கூட்டர் மாடலையும் 2023-2024 ஆம் நிதி ஆண்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஹோண்டா EV இருசக்கர வாகனங்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள புதிய தயாரிப்புகளாகவும், பிளாட்ஃபார்ம் ‘E’ என பெயரிடப்பட்ட ஒரு பிரத்யேக தளத்தை உருவாக்கியுள்ளது. பல்வேறு பேட்டரி கட்டமைப்பு மற்றும் பல்வேறு மாடல்களை இதன் அடிப்படையில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.

ஹோண்டா EV

ஹோண்டா அறிவித்துள்ள புதிய EV எதிர்கால திட்டங்களை மூன்று ‘E’ அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை E, பிளாட்ஃபார்ம் E மற்றும் வொர்க்ஷாப் E  என அனைத்திற்கும் E என்ற குறீயிட்டு பெயரை வைத்துள்ளது. கர்நாடகா மாநிலத்தின் நர்சபுராவில் உள்ள ஹோண்டா இருசக்கர தொழிற்சாலையில் மின்சார வாகனங்களை மட்டும் பிரத்தியேகமாக உற்பத்தி செய்யப்படும் என அறிவித்துள்ளது.

2030 ஆம் ஆண்டிற்குள் இந்நிறுவனம் ஆண்டுக்கு 10 லட்சம் மின்சார வாகனங்களை விற்பனை செய்வதனை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த தொழிற்சாலை மேம்பட்ட ஆட்டோமேஷனைக் கொண்டிருக்கும் மற்றும் 100 சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்  மூலம் செயல்படும். புதிய வசதியில் தயாரிக்கப்படும் EV வாகனங்களுக்கு உள்நாட்டில் இருந்து பெறப்படும் பேட்டரிகள், மோட்டார்கள் மற்றும் PCU களை உள்ளடக்கியதாக செயல்படும்.

ஹோண்டா தனது முதல் EV மாடலை ஆக்டிவா எலக்ட்ரிக் என்று அழைக்கலாம். சமீபத்தில், ஹோண்டா நிலையாக பொருத்தப்பட்ட பேட்டரி மற்றும் ஹப் மோட்டருக்கான காப்புரிமையை தாக்கல் செய்திருந்தது. எனவே இந்த மாடல் முதலவதாக இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாகலாம்.

இரண்டாவது ஹோண்டா EV மாடல் மாற்றக்கூடிய பேட்டரியுடன் இருக்கும், எனவே பேட்டரிகளை எளிதாக மாற்றிக் கொள்ள முடியும் வகையில் அமைந்திருக்கும். இந்த மாடலுக்கு நாடு முழுவதும் உள்ள 6,000+ டச் பாயின்ட்களில் பேட்டரி-ஸ்வாப்பிங் நிலையங்களை துவக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

EV செய்திகளைத் தவிர, 2024 நிதியாண்டில் முதல் பாதியில் BS-6 முறையில்  2 ஆம் கட்ட விதிமுறைகளுக்கு, ஏற்ப E20 (80% பெட்ரோல் 20 % எத்தனால்) ஃப்ளெக்ஸ் எரிபொருள் இணக்கத்திற்கும் இணங்குவதற்கு ஹோண்டா தனது தயாரிப்பு வரிசையை மாற்றும், மேலும் இந்நிறுவனத்தின் குஜராத் வித்தலாபூர் தொழிற்சாலையில் ஏற்றுமதிக்காக 6 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட புதிய ஸ்கூட்டர் அசெம்பிளி லைனை அமைக்க திட்டமிட்டுள்ளது.