Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

EICMA 2023ல் சுசூகி GSX-8R, GSX-S1000GX பைக் அறிமுகமானது

by MR.Durai
12 November 2023, 7:05 pm
in Bike News
0
ShareTweetSend

Suzuki GSX-8R and Suzuki GSX-1000gx

இத்தாலி மிலன் நகரில் நடைபெறுகின்ற EICMA 2023 மோட்டார் கண்காட்சியில் சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், GSX-8R மற்றும் GSX-S1000GX என இரண்டு புதிய பைக்குகளை காட்சிப்படுத்தியுள்ளது.

ஸ்போர்ட்டிவ் பைக் பிரிவில் ஃபேரிங் செய்யப்பட்ட மாடலாக வந்துள்ள GSX-8R பைக்கில் 776 சிசி இன்லைனன் ட்வீன் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜினின் நுட்பவிபரங்கள் அறிவிக்கப்படவில்லை.

Suzuki GSX-8R

ஏற்கனவே விற்பனையில் உள்ள அட்வென்ச்சர் ரக V-Strom 800 மற்றும் நேக்டூ ஸ்டைல் GSX-8S பைக்குகளில் உள்ள 776cc இன்லைனன் ட்வீன் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருப்பதனால், அனேகமாக இந்த மாடலும் 82hp பவர் மற்றும் 78Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.

GSX-8R பைக்கில் ரைடு-பை-வயர், குறைந்த ஆர்பிஎம் அசிஸ்ட், டிராக்‌ஷன் கட்டுப்பாடு, பை டைரக்‌சனல் க்விக் ஷிஃப்டர், ஏபிஎஸ் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

இந்த பைக் மாடலில் ஷோவா SFF-BP ஃபோர்க்கு மற்றும் பின்புறத்தில் லிக்டூ ஷாக் அப்சார்பர் உள்ளது. முன்புற பிரேக்குகள் இரட்டை 310 மிமீ டிஸ்க் மற்றும் ஒற்றை 240 மிமீ பின்புற டிஸ்க் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. டன்லப் ரோட்ஸ்போர்ட் 2 டயர்களுடன் 17 இன்ச் காஸ்ட் அலுமினிய வீல் இணைக்கப்பட்டுள்ளன.

Suzuki GSX 8R
Suzuki GSX 8R headlight
Suzuki GSX 8R black
Suzuki GSX 8R bike
Suzuki GSX 8R rear
Suzuki GSX 8R side

Suzuki GSX-1000GX

அடுத்து, இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள GSX-S1000GX  ஸ்போர்ட்டிவ் கிராஸ்ஓவர் பைக்கில் 999cc இன்லைன் நான்கு சிலிண்டர் லிக்விட்-கூல்டு இன்ஜின் பவர் மற்றும் டார்க் புள்ளிவிவரங்கள் தற்போது வெளியிடப்படவில்லை.

GSX-S1000GX பைக்கின் முன்புறத்தில் USD முன் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் பெற்று இவை இரண்டும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடியவை ஆகும். இரட்டை 310 மிமீ முன் டிஸ்க் மற்றும் ஏபிஎஸ் உடன் ஒற்றை பின்புற டிஸ்க் கொண்டுள்ளது. 120/70 முன்புற டயர் மற்றும் 190/50 பின்புற டயர்களில் மூடப்பட்ட 17 அங்குல சக்கரங்களில் பொருத்தப்பட்டுள்ளன.

 

suzuki gsx 1000gx side

suzuki gsx 1000gx
suzuki gsx 1000gx side
Suzuki GSX 1000gx black
Suzuki GSX-1000gx

Related Motor News

இந்தியாவில் ரூ.9.25 லட்சத்தில் சுசூகி GSX-8R விற்பனைக்கு வெளியானது

Tags: Suzuki GSX-1000gxSuzuki GSX-8R
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

new tvs apache rtx adventure bike

புதிய அட்வென்ச்சர் சாகாப்தத்தை உருவாக்குமா.! அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300

new tvs apache rtx

₹ 1.99 லட்சத்தில் டிவிஎஸ் மோட்டாரின் அப்பாச்சி RTX அட்வென்ச்சர் வெளியானது

நவம்பர் 11ல் யமஹாவின் இந்திய அறிமுகம் யார்..! WR 155 R அல்லது XSR 155..?

டிவிஎஸ் அட்வென்ச்சர் டூரிங் அக்டோபர் 15ல் அறிமுகம்

ஏபிஎஸ் பெற்ற டிவிஎஸ் ரைடர் 125 விற்பனைக்கு வெளியானது

110cc டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்டில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் அறிமுகமானது

125 மில்லியன் ஹீரோ பைக் விற்பனையை கொண்டாடும் சிறப்பு எடிசன் வெளியானது

ஏபிஎஸ் பெற்ற ரைடர் 125 மாடலை வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

புதிய நிறத்தில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் விற்பனை துவங்கியது

ஹீரோவின் கிளாமர் எக்ஸ் வாங்குபவர்கள் அறிய வேண்டியது என்ன?

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan