Automobile Tamilan

விற்பனையில் டாப் 10 பைக்குகள் – பிப்ரவரி 2023

tvs-raider-bike

கடந்த பிப்ரவரி 2023 மாதந்திர விற்பனை முடிவில் இந்தியளவில் சுமார் 2,88,605 எண்ணிக்கையில் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்குகளை விற்பனை செய்து நாட்டின் முதன்மையான மாடாலாக விளங்குகின்றது.

அதிகம் விற்பனை ஆகின்ற இரு சக்கர வாகனங்களில் தொடர்ந்து ஸ்ப்ளெண்டர் முன்னிலையில் உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் 1,74,503 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

டாப் 10 பைக்குகள் – பிப்ரவரி 2023

ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது, கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 1,93,731 யூனிட்கள் விற்பனையாகி இருந்த 49 சதவிகிதம் அதிகரித்து 2,88,605 யூனிட்கள் விற்பனை ஆகியுள்ளது.

டாப் 10  பிப்ரவரி  2023 பிப்ரவரி 2022
1. ஹீரோ ஸ்ப்ளெண்டர் 2,88,605 1,93,731
2. பஜாஜ் பல்சர் 80,106 54,951
3. ஹீரோ HF டீலக்ஸ் 56,290 75,927
4. ஹோண்டா ஷைன் 35,594 81,700
5. டிவிஎஸ் அப்பாச்சி ,34,935 16,406
6. டிவிஎஸ் ரைட்ர் 30,346 14,744
7. கிளாசிக் 350 27,461 30,082
8. பஜாஜ் பிளாட்டினா 23,923 29,124
9. யமஹா FZ 17,262 13,395
10. ஹண்டர் 350 12,925

டாப் 10 பைக்குகளில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மற்றும் ஹண்டர் பைக்குகளும், 125சிசி சந்தையில் ஹோண்டா சிபி ஷைன் மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி, ரைடர் போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளது. பல்சர் ஆட்டோ நிறுவனத்தின் பிளாட்டினா மற்றும் பல்சர் பைக்குகளும் உள்ளது.

Exit mobile version