விற்பனனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள் – செப்டம்பர் 2020

4338b hero splendor black and accent in bettle red

பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் விற்பனை எண்ணிக்கை கனிசமாக உயர துவங்கியுள்ள நிலையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள் என்ற பெருமையை பெற்ற செப்டம்ப்பர் 2020 மாதந்திர விற்பனை பட்டியலை கானலாம்.

நாட்டின் முன்னணி பைக் மாடலாக 2,80,250 எண்ணிகையில் விற்பனை செய்யப்பட்டு தொடர்ந்து ஹீரோ ஸ்ப்ளெண்டர் விளங்குகின்றது. அதனை தொடர்ந்து ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக் 2,16,201 ஆக பதிவு செய்துள்ளது.

125சிசி சந்தையை பொறுத்தவரை 1,18,004 எண்ணிக்கையில் ஹோண்டா சிபி ஷைன் முதலிடத்திலும், ஹீரோ கிளாமர் 69,477 விற்பனை எண்ணிக்கையிலும், பல்சர் பிராண்டு பைக்குகள் மொத்தமாக 1,02,698 பதிவு செய்திருந்தாலும், இவற்றில் 125சிசி மாடலின் எண்ணிக்கை 51,540 ஆகும்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 பைக் மாடல் 38,827 ஆக பதிவு செய்துள்ளது.

டாப் 10 பைக்குகள் – செப்டம்பர் 2020

வ.எண் தயாரிப்பாளர் செப்டம்பர் 2020
1. ஹீரோ ஸ்ப்ளெண்டர் 2,80,250
2. ஹீரோ HF டீலக்ஸ் 2,16,201
3. ஹோண்டா சிபி ஷைன் 1,18,004
4. பஜாஜ் பல்சர் 1,02,698
5. ஹீரோ கிளாமர் 69,477
6. டிவிஎஸ் XL சூப்பர் 68,929
7. ஹீரோ பேஸன் 63,296
8. பஜாஜ் பிளாட்டினா 55,496
9. பஜாஜ் சிடி 45,105
10. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 38,827

 

Exit mobile version