ஹீரோ ஸ்ப்ளெண்டர்+ பிளாக் மற்றும் ஆக்சென்ட் எடிசன் விற்பனைக்கு வந்தது

Hero Splendor Black and Accent Firefly Golden color

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், ஸ்பிளெண்டர்+ பிளாக் மற்றும் ஆக்சென்ட் என்ற பெயரில் சிறப்பு எடிசனை மூன்று விதமான டிசைன் தீம் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் பெற்றுக் கொள்ளலாம்.

கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நடத்திய திறமைக்கான ஹீரோ கோ லேப்ஸ் டிசைன் தீம் போட்டியில் 10,000க்கு மேற்பட்ட டிசைன் தீம்கள் பெறப்பட்ட நிலையில் சிறந்த டிசைன் என தேர்வு செய்யப்பட்ட முதல் மூன்று டிசைன் வடிவத்தை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற பிரசத்தி பெற்ற இரு சக்கர வாகனமாக விளங்குகின்ற ஸ்பிளெண்டர்+ பைக்கில் 10 சென்சார்கள் கொண்ட நுட்பத்துடன் (XSens technology) 100சிசி எஃப்.ஐ என்ஜின் பெற்று 8000 ஆர்.பி.எம்-ல் 7.91 பிஹெச்பி பவருடன், 6,000 ஆர்.பி.எம்-ல் 8.05 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது.

ஸ்ப்ளெண்டர் + பிளாக் அண்ட் ஆக்சென்ட் பதிப்பு கருப்பு டயர்களைக் கொண்ட ‘ஆல்-பிளாக்’ அவதாரத்தில் வந்துள்ளது. கருப்பு நிற இன்ஜின் மற்றும் கருப்பு நிற செயின் கவர், கருமை நிற டயர் ஸ்டைலிங் 3D முறையிலான ஹீரோ லோகோ ஆகியவற்றை கொண்டுள்ளது.

இதனை ஹீரோ நிறுவனம், வாடிக்கையாளர்கள் மூன்று தனித்துவமான வடிவமைப்பு தேர்வு செய்யலாம். அவற்றில் பீட்டில் சிவப்பு, ஃபயர்ஃபிளை கோல்டன் மற்றும் பம்பல் பீ மஞ்சள் என குறிப்பிட்டுள்ளது.

Hero Splendor Black and Accent Bumble Bee Yellow

வாடிக்கையாளர்கள், தங்கள் விருப்பம் போல கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். பாடி கிராபிக்ஸ் கூடுதலாக பெற ரூ.899 மற்றும் கிராபிக்ஸ், 3டி ஹீரோ லோகோ, மற்றும் ரிம் டேப் ஆகியவற்றின் விலை ரூ.1399 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பிளாக் அன்ட் ஆக்செனட் எடிசன் விலை ரூ. 64,790 (எக்‌ஸ்ஷோரூம் டெல்லி)

Hero Splendor Black And Accent

hero Splendor Black and Accent in Bettle Red

Web Title : Hero Splendor+ Black and Accent edition launched – Tamil Bike News