டிரையம்ப் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்தின் 400சிசி எஞ்சின் பிரிவில் அடுத்த மாடலாக ஸ்கிராம்பளர் 400XC வருவதனை உறுதி செய்து முதல் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
பஜாஜ் ஆட்டோ மற்றும் டிரையம்ப் கூட்டணியில் ஸ்பீடு டி4, ஸ்பீடு 400, ஸ்கிராம்பளர் 400X என மூன்று மாடல்கள் சந்தையில் உள்ள நிலையில் கூடுதலாக வரவுள்ள 400எக்ஸ்சி ஸ்கிராம்பளர் பைக்கில் ஆஃப் ரோடு சாகசம் சார்ந்த பயன்பாடுகளுக்கான கூடுதல் வசதிகள் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Triumph Scrambler 400XC
வெளியிடப்பட்டுள்ள டீசரில் மஞ்சள் நிறத்தை பெற்று மிக கவர்ச்சிகரமாக விளங்கும் வகையில் அமைந்துள்ள ஸ்கிராம்பளர் 400எக்ஸ்சி பைக்கில் தொடர்ந்து TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் பாடி நிறத்திலான ஃபென்டர், கிராஸ் ஸ்போக் வீலுடன் ட்யூப்லெஸ் டயர், ஃபிளைஸ்கீரின், எஞ்சின் பாதுகாப்பு கவர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பெற்றிருக்கலாம். மற்றபடி, வழக்கமான ஸ்கிளாம்பளர் 400எக்ஸ் பைக்கிலிருந்து பெரும்பாலான வசதிகளை பகிர்ந்து கொண்டாலும் சற்று மாறுபட்ட தோற்றத்தை வெளிப்படுத்தும்.
தற்பொழுது விற்பனையில் உள்ள டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400X விலை ரூ.2.67 லட்சத்தில் கிடைக்கும் நிலையில் கூடுதல் மாற்றங்களை பெற்ற ஸ்கிராம்பளர் 400எக்ஸ்சி விலை ரூ.3 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.