டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது புதுப்பிக்கப்பட்டு வந்துள்ள 2024 ஸ்பீடு 400 என இரண்டு மாடல்களுக்கும் உள்ள வித்தியாசங்கள் மற்றும் ஒற்றுமைகள் என்ன மேலும் எவ்வாறு விலை குறைப்பு சாத்தியமானது உள்ளிட்ட பல்வேறு விபரங்களை பார்க்கலாம் வாருங்கள்.
இரு மாடல்களுக்கான விலை வித்தியாசம் ரூபாய் 23 ஆயிரம் வரை அமைந்திருக்கின்றது.
அடிப்படையான டிசைன் அம்சங்கள் இரண்டு மாடல்களுக்கும் ஒரே மாதிரியாக அமைந்து இருந்தாலும் கூட வித்தியாசத்தை வெளிப்படுத்தும் வகையில் சில மாற்றங்கள் இருக்கின்றன. குறிப்பாக பாடி கிராபிக்ஸ் மற்றும் நிறங்கள் சற்று வேறுபடுகின்றன.
வட்ட வடிவமான LED ஹெட்லைட், ஒரே மாதிரியான 13 லிட்டர் கொள்ளளவு பெற்ற டேங்க் வடிவமைப்பு மற்றும் மெல்லிய டெயில் பகுதி, டேக்கோமீட்டர், ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர் உள்ளிட்ட பிற அடிப்படைத் தகவல்களை கொண்டுள்ள எல்சிடி கிளஸ்ட்டரில் அனலாக் ஸ்பீடோமீட்டருடன் பெறுகிறது.
முதலில் எஞ்சின் அமைப்பில் இரண்டு மாடல்களும் ஒரே 398.15 சிசி TR இன்ஜினை பகிர்ந்து கொண்டாலும் கூட பவர் மற்றும் டார்க் வெளியீட்டில் மாறுபாடுகள் உள்ளது. குறிப்பாக புதிதாக வந்துள்ள மாடல் ஸ்பீடு டி4 பவர் குறைவாக அமைந்திருப்பதுடன் சிறப்பான டார்க் வெளிப்படுத்தும் வகையில் இதனுடைய டியூனிங் முறையான மேம்படுத்தப்பட்டு குறைவான RPM-ல் அதிகபட்ச டார்க்கினை வெளிப்படுத்தும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டிருப்பதுடன் எக்ஸ்ஹாஸ்ட் நோட் வேறுபடுத்தப்பட்டுள்ளது.
இரண்டு ஸ்பீடு 400 பைக்குகளுக்கான என்ஜின் சிசி, மைலேஜ் உட்பட பவர் டார்க் விபரங்கள் அட்டவனையில் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.
Speed T4 | Speed 400 | |
என்ஜின் | 398.15cc single cyl Liquid cooled | 398.15cc single cyl Liqud cooled |
பவர் | 31 PS / 30.6 bhp (22.8 kW) at 7,000 rpm | 40 PS / 39.5 bhp (29.4 kW) at 8,000 rpm |
டார்க் | 36 Nm at 5,000 rpm | 37.5 Nm at 6,500 rpm |
கியர்பாக்ஸ் | 6 speed | 6 speed |
மைலேஜ் | 34 kmpl | 30 kmpl |
T4 பைக்கை விட சுமார் 9 ஹெச்பி வரை கூடுதலான பவரை வெளிப்படுத்துகின்றஸ்பீடு 400 மாடல் டார்க்கில் 1.5Nm மட்டும் வித்தியாசப்படுகின்றது. 2024 ஸ்பீடு 400 மாடலை விட T4 மாடல் கூடுதலான மைலேஜ் வழங்கும் அதே நேரத்தில் குறைவான நிமிட சுழற்சியில் அதிகபட்ச டார்க்கினை வழங்கும் இதன் மூலம் சிறப்பான க்ருஸிங் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டி4 மாடல் ரைட் பை வயர் நுட்பத்தினை பெறவில்லை.
குறிப்பாக இரு மாடல்களுக்குமான பின்புற செயின் ஸ்பிராக்கெட்டில் ஸ்பீடு 400 பைக் 43 பற்களையும், ஸ்பீடு T4 மாடலுக்கு 39 பற்களை மட்டும் உள்ளது.
இரு மாடல்களுக்கான மெக்கானிக்கல் சார்ந்த மாற்றங்களில் மிக முக்கியமாக ஸ்பீடு டி4 பைக்கின் விலை குறைப்பிற்காக முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் போர்க் மற்றும் எளிமையான ஹேண்டில் பார் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
அதே மாதிரி டயர் அளவுகளில் இரு மாடல்களும் வித்தியாசப்படுகின்றது குறிப்பாக MRF Zapper-FX2 டயர் ஆனது பெறுகின்ற டி4 மாடலின் அளவுகள் பின்வருமாறு உள்ளன அதே நேரத்தில் ஹை ப்ரோபைல் கொண்ட மிகவும் சிறப்பான Vredestein ரேடியல் டயரினை ஸ்பீடு 400 கொண்டிருக்கின்றது. கூடுதலாக, 5 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பிரேக் மற்றும் கிளட்ச் லிவர் உள்ளது.
Speed T4 | Speed 400 | |
முன்பக்க சஸ்பென்ஷன் | 43mm டெலிஸ்கோபிக் ஃபோர்க் | 43 mm USD ஃபோர்க் |
பின்புறம் சஸ்பென்ஷன் | மோனோஷாக் | மோனோஷாக் |
டயர் முன்புறம் | 110/70-17 | 110/80-17 |
டயர் பின்புறம் | 140/70-17 | 150/70-17 |
பிரேக் முன்புறம் | 300mm டிஸ்க் | 300mm டிஸ்க் |
பிரேக் பின்புறம் | 230mm டிஸ்க் | 230mm டிஸ்க் |
வீல்பேஸ் | 1406mm | 1386mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 165mm | 165mm |
எடை | 180 KG | 176 KG |
எரிபொருள் டேங்க் கொள்ளளவு | 13 லிட்டர் | 13 லிட்டர் |
இருக்கை உயரம் | 806mm | 803mm |
இரு மாடல்களுக்கான விலை வித்தியாசம் ரூ.23,000 வரை அமைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் டிரையம்ப் ஸ்பீடு T4 ஆன்-ரோடு விலை ரூ.2.56,561 மற்றும் MY25 ஸ்பீடு 400 ஆன்ரோடு விலை ரூ. 2,91,546 ஆகும்.
எக்ஸ்ஷோரூம் | ஆன்ரோடு | |
Triumph Speed T4 | ₹ 2,17,000 | ₹ 2,56,561 |
Triumph Speed 400 | ₹ 2,40,000 | ₹ 2,91,456 |
(on-road Price TamilNadu)
டீலர்களை பொறுத்து விலை மற்றும் கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்படும் பொழுது விலை மாறுபடும்.