இந்தியாவின் பிரபலமான ஸ்போர்ட்டிவ் பைக்குகளில் ஒன்றான அப்பாச்சி ஆர்டிஆர் வரிசையில், புதிய ரேஸ் எடிசன் மாடலாக டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 பைக் ரூ. 83,233 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி RTR 180

சமீபத்தில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கில் வெள்ளை நிறத்திலான ரேஸ் எடிசன் மாடல் வெளியானதை தொடர்ந்து , தற்போது 180 சிசி மாடலில் சாதாரண வேரியண்டை விட ரூ.550 கூடுதலான விலையில் அப்பாச்சி 180 ரேஸ் எடிசன் விற்பனைக்கு வந்துள்ளது.

16 ஹெச்பி ஆற்றல் மற்றும் 15.5 என்எம் இழுவைத் திறனை வழங்கும் 177சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இட்பெற்று 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.96 விநாடிகளுடன், அதிகபட்சமாக மணிக்கு 114 கிமீ வேகத்தை எடுத்துக் கொள்ளும்.

வெள்ளை நிறத்தில் வந்துள்ள ரேஸ் எடிசன் மாடல் கார்பன் ஃபைபர் அம்சங்களை கொண்டு இலகு எடைக்கான அம்சமாக இடம்பெற்றிருக்கும்.  முன்புறத்தில் 270 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 200 மிமீ டிஸ்க் பிரேக் பெற்று சிறப்பு ரிம் ஸ்ட்ரிப், 3டி டிவிஎஸ் லோகோ, நீல நிறத்திலான பின்புறத்தை கொண்ட இன்ஸ்டுருமென்ட் கிளஸ்ட்டரை பெற்றுள்ளது. கிளஸ்ட்டரில் 0-60 கிமீ வேகத்தை எட்டுவதனை காண்பிக்கும் வசதியுண்டன், லேப் டைமர், ஓடோமீட்டர், டிரிப் மீட்டர், சர்வீஸ் இன்டிகேட்டர் உள்ளிட்ட அடிப்படை அம்சங்களை பெற்று விளங்குகின்றது.

டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 ரேஸ் எடிசன் – ரூ. 83,233 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)