டிவிஎஸ் மோட்டாரின் மிகவும் பிரசத்தி பெற்ற அப்பாச்சி பிராண்டின் வெற்றிகரமான 20 ஆண்டுகளை கடந்ததை கொண்டாடும் வகையில் சிறப்பு Anniversary எடிசன் மற்றும் 2025 அப்பாச்சி RTR 160 4V, அப்பாச்சி RTR 200 4V ஆகிய மாடல்களும் சந்தைக்கு வந்துள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட அப்பாச்சி பிராண்டில் தற்பொழுது வரை சுமார் 65 லட்சத்துக்கும் கூடுதலான இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரேசிங் DNAவை மையமாக கொண்டு மிகச் சிறப்பான ஸ்போர்ட்டிவ் அனுபவத்தை பெற்றிருக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
குறிப்பாக இந்த மாடல்களுக்கு வலுவான சவாலினை பஜாஜ் பல்சர் ஏற்படுத்துகின்ற நிலையில், இதுதவிர ஜிக்ஸர், எக்ஸ்ட்ரீம், டியூக், யமஹா MT-15 உள்ளிட்டவை கிடைக்கின்றது.
- TVS Apache RTR 160 – ₹ 1,37,990
- TVS Apache RTR 180 – ₹ 1,39,990
- TVS Apache RTR 160 4V – ₹ 1,50,990
- TVS Apache RTR 200 4V – ₹ 1,62,990
- TVS Apache RTR310 – ₹ 3,11,000
- TVS Apache RR310 – ₹ 3,37,000
(எக்ஸ்-ஷோரூம்)
வழக்கமான மாடலை விட மாறுபட்ட நிறத்தை பெறுவதற்காக 20 வருட பிரத்யேக அப்பாச்சி லோகோவுடன் கூடிய கருப்பு மற்றும் ஷாம்பெயின் தங்க நிறத்தை பெற்ற ஆண்டுவிழா கிராபிக்ஸ் பெற்ற அனைத்து மாடல்களிலும் USB சார்ஜர் மற்றும் டூயல் டோன் கொண்ட அலாய் வீல கருப்பு மற்றும் தங்க நிறத்தை RTR 160 முதல் 200 4V மட்டுமே பெற்றுள்ளது.