Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

₹ 2.40 லட்சத்தில் 2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 விற்பனைக்கு வெளியானது

by automobiletamilan
January 30, 2020
in பைக் செய்திகள்

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310

மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் தோற்றத்துடன் பல்வேறு புதிய வசதிகளை பெற்று பிஎஸ்6 என்ஜின் கொண்டதாக 2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 விற்பனைக்கு ₹ 2.40 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அப்பாச்சி 310 பைக்கின் வேகம் 125 கிமீ ஆக குறைக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் கிடைத்து வந்த பிஎஸ்4 என்ஜின் பெற்ற மாடலை விட ₹ 12,000 வரை விலை உயர்த்தப்பட்டு பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு ஏற்ற என்ஜின் மட்டுமல்லாமல் ரைட் பை வயர், ரைடிங் மோட் உட்பட பல்வேறு நவீனத்துவமான நுட்பம் சார்ந்த வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஸ்டைலிங் அம்சங்களை பொறுத்தவரை, கூடுதலான கிராபிக்ஸ், புதிய கருப்பு, கிரே மற்றும் சிவப்பு நிறங்களை கொண்டுள்ளது. முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், 5 அங்குல டெப்ளெட் அகலம் உள்ள டிஜிட்டல் கிளஸ்ட்டர் இணைக்கப்பட்டுள்ளது.

பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்க இணக்கமான, 312.2 சிசி என்ஜின் 34 ஹெச்பி பவரை 9,700 ஆர்.பி.எம் மூலமாகவும் மற்றும் 7,700 ஆர்.பி.எம்-ல் 27.3 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் உடன் கூடிய 6 வேக கியர்பாக்ஸ் இணைந்துள்ளது.

முன்பாக மணிக்கு 160 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனை பெற்றிருந்த அப்பாச்சி ஆர்ஆர் 310 தற்போது 125 கிமீ ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலுக்கு 5 வருட வாரண்டி வழங்கப்படுகின்றது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 நான்கு ரைடிங் மோட் முறைகள் (ரெயின்,அர்பன், ஸ்போர்ட் மற்றும் டிராக்) போன்றவற்றை பெறும் முதல் பைக் மாடலாக விளங்குகின்றது.  இந்த மாடலில் வழங்கப்பட்டுள்ள ஸ்போர்ட் மற்றும் டிராக் என இரு ரைடிங் மோடுகளை பெற முதல் சர்வீஸ் காலத்தை கடக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கின் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்று ப்ளூடூத்துடன்  இணைப்பினை ஏற்படுத்துகின்ற 5.0 அங்குல வண்ண TFT கிளஸ்ட்டர் கருவியை பெறுகின்றது. டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் வாயிலாக கனெக்ட்டிவிட்டி அம்சங்களை தங்கள் ஸ்மார்ட்போனில் பெறலாம். மேலும் டிவிஎஸ் கனெக்ட் ஆப் வாயிலாக இணைப்பினை ஏற்படுத்தலாம்.  இந்த மாடலில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அழைப்புகளை ஏற்பது அல்லது தவிர்ப்பது என பலவற்றை வழங்குகின்றது.

பிஎஸ் 6 அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் உள்ள க்ளைடு த்ரூ டெக்னாலஜி பிளஸ் (GTTP-) உடன் பொருத்தப்பட்டுள்ளது. இது நகர்ப்புறத்தில் ஓட்டும்போது ஆறாவது கியரிலும் பயணிக்கும் வகையில் இயங்குகிறது. திராட்டிலை கொடுக்காமலே பைக்கினை இயக்க இயலும். பொதுவாக இந்த அம்சம் தானியங்கி கார்களில் இடம்பெறுவது வழக்கமாகும்.

Tags: TVS Apache RR310டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version