Automobile Tamilan

டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 ரேசிங் எடிசன் அறிமுகமானது

விற்பனையில் உள்ள டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 2V பைக்கின் அடிப்படையில் வெளியாகியுள்ள ரேசிங் எடிசனின் விலை ரூ.1,28,720 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.முன்பாக   கிடைக்கின்ற ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி  வசதிகளை கொண்ட வேரியண்ட்டை விட ரூ.1,500 வரை கூடுதலாக அமைந்துள்ளது.

அப்பாச்சி RTR 160 2V மாடலில்  15.82 bhp பவர், 13.85 Nm டார்க் ஆனது வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் ஆனது வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் ஸ்போர்ட், அர்பன் மற்றும் ரெயின் ஆகிய மூன்று ரைடிங் மோடுகளை பெற்றுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 2வி

ரேசிங் எடிஷனில், எரிபொருள் டேங்க் மற்றும் டெயில் பகுதியில் சிவப்பு மற்றும் சாம்பல் நிற கோடுகளுடன் கூடிய மேட் பிளாக் நிறத்தை கொண்டுள்ளது. இதனுடன் கார்பன் ஃபைபர் மற்றும் ரேஸ் மாடல்களுக்கான பாடி கிராபிக்ஸ் மற்றும் ரேசிங் எடிஷன் லோகோ உள்ளது. கூடுதலாக, சிவப்பு அலாய் வீல் கொண்டுள்ளது. மற்றபடி, சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் டிஸ்க் பிரேக் கொண்டு ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் வாய்ஸ் அசிஸ்டென்ஸ், டர்ன் பை டர்ன் நேவிகேஷன்,  க்ளைடு த்ரூ டெக்னாலஜி (GTT- Glide Through Technology) மற்றும் எல்இடி ஹெட்லேம்ப் வழங்குகின்றது.

17 அங்குல அலாய் வீல் உடன் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ஸ்பிரிங் உடன் கூடிய இரட்டை ஷாக் அப்சார்பர் உள்ளது.

2024 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 2வி மாடல் ரூ.1,09,990 முதல் ரூ.1,28,720 (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு) ஆக கிடைக்கின்றது.

Exit mobile version