டிவிஎஸ் ஐக்யூப் மின்சார ஸ்கூட்டரின் சிறப்பு பார்வை

TVS iQube Electric

இந்தியாவில் பரவலாக எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரித்து வரும் நிலையில் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு ரூபாய் 1 லட்சத்து 15 ஆயிரம் ஆன்-ரோடு விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் பஜாஜ் சேட்டக், ஏதெர் 450, ஒகினாவா ஐ பிரைஸ் மற்றும் பென்லிங் ஆரா போன்ற மாடல்கள் விளங்குகின்றது.

முதற்கட்டமாக பெங்களூரு நகரில் மட்டும் கிடைக்கின்ற ஐ-கியூப் ஸ்கூட்டர் படிப்படியாக நாட்டின் முன்னணி நகரங்களில் உள் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டவுடன் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. பெங்களூருவை பொறுத்தவரை ஏதெர், சேட்டக் உட்பட பெரும்பாலான மின்சார வாகனங்கள் கிடைத்து வருகின்றது.

டிசைனிங்

ஸ்டைலிங் அம்சங்களை பொறுத்தவரை மிக நேர்த்தியான எல்இடி ஹெட்லைட், எல்இடி ரன்னிங் விளக்குகள், எல்இடி டெயில் லைட் பெற்றுள்ளது. ஒளிரும் வகையிலான டிவிஎஸ் லோகோ மற்றும் பவர்ட்ரெயின் பக்கவாட்டிலும் ஒளிரும் வகையில் TVS Electric பேட்ஜ் இணைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வெள்ளை நிறத்தை மட்டும் பெற்றதாக வந்துள்ள இந்த ஸ்கூட்டரில் கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை பெறுவதற்காக டிஎஃப்டி கிளஸ்ட்டர் இணைகப்பட்டுள்ளது.

இருக்கையின் அடியில் சிறப்பான வகையில் பொருட்களை ஸ்டோர் செய்வதற்கான இடவசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ரேஞ்சு, பவர் விபரம்

ஈக்கோ மற்றும் பவர் என இரு மோடு ஆப்ஷன் இது தவிர முன் மற்றும் பின்புறத்தில் பார்க்கிங் செய்வதற்கான கியூ அசிஸ்ட் மோட் என மொத்தமாக மூன்று விதமான மோடினை ஐகியூப் கொண்டுள்ளது.

118 கிலோ கிராம் எடையை கொண்டுள்ள இந்த மாடலில் முன்புறத்தில் 220 மிமீ டிஸ்க், பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக் இணைக்கப்பட்டு, இரு பக்கத்திலும் 90/90 12 அங்குல டயர், 150 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் வழங்கப்பட்டுள்ளது.சஸ்பென்ஷனை பொறுத்தவரை முன்புறத்தில் டெலிஸ்கோபிக் பின்புறத்தில் ஹைட்ராலிக் ட்வின் டியூப் சஸ்பென்ஷனை பெற்றுள்ளது.

2.25kWh லித்தியம் ஐயன் பேட்டரி பேக் பெற்றுள்ள இந்த மாடலில் பேட்டரி பராமாரிக்கும் சிஸ்டம் இணைக்கப்பட்டு 5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜிங் ஏறும் வகையிலான சாதாரண சார்ஜிங் 5 ஆம்ப் சாக்கெட் வாயிலாக மட்டும் சார்ஜிங் செய்ய இயலும். இந்த ஸ்கூட்டரில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெறவில்லை. டிவிஎஸ் ஐகியூப் ஸ்கூட்டரில் உள்ள 4.4 கிலோ வாட் பவர் வெளிப்படுத்தும் மின்சார மோட்டார், தொடர்ந்து 3 கிலோ வாட் பவர் வெளிப்படுத்துவதுடன் 140 என்எம் டார்க் சக்கரங்களுக்கு வழங்கப்படுகின்றது.

40 கிமீ வேகத்தில் பயணிக்கும் ஈக்கோ மோட் மூலம் 75 கிமீ ரேஞ்சு வழங்குவதுடன், அதிகபட்ச வேகம் மணிக்கு 78 கிமீ வேகத்தில் பயணித்தால் அனேகமாக 60-65 கிமீ ரேஞ்சு வழங்கலாம்.

பேட்டரி ஆயுள், வாரண்டி விபரம்

பேட்டரியின் ஆயுள் 50,000 கிமீ வரை வரையறுக்கப்பட்டுள்ளது. அதே வேளை இந்நிறுவனம் 3 வருடம் அல்லது 50,000 கிமீ வரை வாரண்டி வழங்குகின்றது.

வசதிகள்

ஐ க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரை முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு பகல் மற்றும் இரவு நேரத்திற்கு ஏற்ப டிஸ்பிளே கொண்ட அம்சத்துடன் புளூடூத் கனெக்ட்டிவிட்டி மூலம் இணைக்கப்படுகின்ற இந்த கிளஸ்டரில் டிவிஎஸ் ஸ்மார்ட் கனெக்ட் அம்சத்துடன் பிரத்தியேக டிவிஎஸ் ஐக்யூப் ஆப் இணைப்பு வழங்கப்படுகின்றது.

குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டும் பயணிக்கின்ற வகையிலான புவி-ஃபென்சிங், நேவிகேஷன் அசிஸ்டன்ஸ், அதிவேக எச்சரிக்கை, கடைசியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருப்பிடம் மற்றும் அழைப்பு மற்றும் உரை அறிவிப்புகளை கிளஸ்ட்டரில் வழங்கப்பட உள்ளன. மேலும், ‘கியூ-பார்க்’ எனப்படும் பார்க்கிங் அசிஸ்ட் செயல்பாட்டுடன் ஐக்யூப் வருகிறது.

இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள இணைக்கப்பட்ட சிம் கார்டு இயக்குவதற்கும், வீட்டில் சார்ஜரை பொருத்திக் கொள்வதற்கும் அறிமுக சலுகையாக கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஆனால் எதிர்காலத்தில் கட்டணமாக வசூலிக்கப்படும்.

விலை

முதற்கட்டமாக பெங்களூரூ நகரில் இந்த ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த ஸ்கூட்டர் ஜனவரி 27 முதல் 100 யூனிட்டுகள் டெலிவரி வழங்கப்படுவதுடன் மாதம் 1000 யூனிட்டுகள் வரை தயாரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரூ.5000 செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ.1.15 லட்சம் (ஆன்ரோடு பெங்களூரு)

போட்டியாளர்களுடன் விலை ஒப்பீடு

விலை பட்டியல் டிவிஎஸ் ஐக்யூப் பஜாஜ் சேட்டக் ஏதெர் 450
ரூ. 1.15 லட்சம் (ஆன்-ரோடு பெங்களூரு) ரூ. 1 லட்சம் (Urbane)
ரூ.1.13 லட்சம் (ஆன்-ரோடு பெங்களூரு)
ரூ. 1.15 லட்சம் (Premium)

 

இங்கே வங்கப்பட்டுள்ள விலையில் பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டரின் விலை எக்ஸ்ஷோரூம் ஆகும். சென்னை உட்பட முன்னணி மெட்ரோ நகரங்களில் அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்ளில் விற்பனைக்கு வெளியாகலாம்.

மேலும் படிங்க – சேட்டக் Vs ஏதெர் 450 Vs ஐகியூப் – ஒப்பீடு

Exit mobile version