டிவிஎஸ் ஐக்யூப் Vs பஜாஜ் சேட்டக் Vs ஏதெர் 450 – எது பெஸ்ட் சாய்ஸ்

0

TVS iQube Electric vs Bajaj Chetak vs Ather 450

இந்தியாவில் கிடைக்கின்ற மிகவும் ஸ்டைலிஷான பல்வேறு வசதிகளை பெற்ற டிவிஎஸ் ஐக்யூப் Vs பஜாஜ் சேட்டக் Vs ஏதெர் 450 போன்ற மூன்று மாடல்களை ஒப்பீட்டு அதன் விபரங்களுடன் சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி அறிந்து கொள்ளலாம்.

Google News

மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் நுட்ப விபரங்கள், வழங்கப்பட்டுள்ள வசதிகள் மற்றும் அதன் ரேஞ்சு விபரங்களுடன் அதிகபட்ச வேகத்தை பற்றியும் இங்கே ஒப்பீட்டு தெரிந்து கொள்வோம். பொதுவாக மூன்று மாடல்களுமே பெங்களூருவில் கிடைக்கின்றது. விரைவில் ஏதெர் 450 புனேவில் வெளியிடப்பட உள்ளது.

எலெக்ட்ரிக் மோட்டார் & டார்க்

மற்ற இரு மாடல்களை விட அதிகபட்ச திறன் பெற்ற 5.4 Kw எலெக்ட்ரிக் மோட்டாரை ஏதெர் 450 பெறுகின்றது. அடுத்தபடியாக டிவிஎஸ் ஐ-க்யூப் ஸ்கூட்டரில் 4.5 Kw மின் மோட்டாரும், சேட்டக்கில் 4.08 Kw மின்சார மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது.

டிவிஎஸ் iQube சேட்டக் ஏதெர் 450
மோட்டார் 4.5kW 4.08kW 5.4kW
டார்க் 140Nm (சக்கரத்தில்) 16Nm 20.5Nm

 

TVS iQube Electric

ரேஞ்சு, பேட்டரி மற்றும் சார்ஜிங் விபரம்

சேட்டக் மற்றும் ஏதெர் 450 என இரு மாடல்களுமே ஃபாஸ்ட் சார்ஜிங் முறையை ஆதரிக்கின்ற நிலையில் டிவிஎஸ் ஐக்யூப் ஃபாஸ்ட் சார்ஜரை பெறவில்லை. இந்த இரு ஸ்கூட்டர்களில் குறைவான அதிகபட்ச வேகத்தை சேட்டக் கொண்டுள்ளது. அதேவேளை நிறுவனத்தின் நுட்பவிபரத்தின்படி 95 கிமீ பயணிக்கும் திறனை வழங்குகின்றது. மற்ற இரண்டும் அதிகபட்சமாக 78 கிமீ க்கு கூடுதலான வேகத்தை பெறுகின்றது.

சேட்டக் மற்றவற்றை விட அதிகபட்ச திறன் வாய்ந்த 3 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்டுள்ளது.

டிவிஎஸ் iQube Electric சேட்டக் ஏதெர் 450
பேட்டரி 2.2kWh 3kWh 2.7kWh
Range 75km இக்கோ மோட் 95km இக்கோ மோட் 75km இக்கோ மோட்
85km ஸ்போர்ட் மோட் 55km ஸ்போர்ட் மோட்
சார்ஜிங் நேரம் 5 மணி நேரம் (5amp சாக்கெட்) 5 மணி நேரம் (5amp சாக்கெட்) 5.30 மணி நேரம் (Dot)
4.20 மணி நேரம் 0-80%
ஃபாஸ்ட் சார்ஜ்          — 3.5 மணி நேரம் – 80 சதவீதம் 1 மணி நேரம் – 80 சதவீதம்

 

chetak

கனெக்ட்டிவிட்டி வசதிகள்

மூன்று ஸ்கூட்டர்களுமே சிறப்பான ஸ்மார்ட்போன் இணைப்பு சார்ந்த வசதிகளையும் வழங்குகின்றன. குறிப்பாக ஐ-க்யூப் மற்றும் ஏதெர் 450 என இரு மாடல்களும் சேட்டக்கை விட கூடுதலாக நேவிகேஷன், குறிப்பிட்ட எல்லையில் மட்டும் பயணிக்க அனுமதி வழங்கும் ஜியோ ஃபென்சிங் போன்றவற்றை பெறுகின்றது.

சேட்டக், ஐக்யூப் என இரு மாடலும் முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் வசதி, சேட்டக்கில் அர்பேன் குறைந்த விலை மாடலில் இரு புறமும் டிரம் பிரேக், ஏத்தர் 450 மாடலில் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.

விலை ஒப்பீடு

விலை ஒப்பீட்டைப் பொறுத்தவரை சேட்டக்கின் பேஸ் வேரியண்ட் விலை பெங்களூரு ஆன்ரோடு குறைவாக இருக்கும். சேட்டக் விலை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது எக்ஸ்ஷோரூம் ஆகும்.. மற்ற இரண்டும் ஆன் ரோடு விலை ஆகும்.

ஆனால் வசதிகள் டாப் ஸ்பீடு, சிறப்பான ஸ்டைலிஷான தன்மை ஆகியவற்றை பெற்று விலையிலும் குறைவாக அமைந்து ஏதெர் 450 முன்னிலை பெறுகின்றது.

விலை பட்டியல் டிவிஎஸ் ஐக்யூப் பஜாஜ் சேட்டக் ஏதெர் 450
ரூ. 1.15 லட்சம் (ஆன்-ரோடு பெங்களூரு) ரூ. 1 லட்சம் (Urbane)
ரூ.1.13 லட்சம் (ஆன்-ரோடு பெங்களூரு)
ரூ. 1.15 லட்சம் (Premium)

 

TVS iQube Electric vs Bajaj Chetak vs Ather 450

போட்டியாளர்களை விட அதிகபட்ச திறன் மற்றும் ரேஞ்சு பெற உள்ள ஏதெர் 450 எக்ஸ் ஜனவரி 28 ஆம் தேதி விற்பனைக்கு கிடைக்க உள்ளது.