டிவிஎஸ் ஜூபிடர் ZX டிஸ்க் பிரேக் விற்பனைக்கு வெளியானது

110சிசி சந்தையில் பிரபலமாக விளங்குகின்ற டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரில் ZX டிஸ்க் பிரேக் பெற்ற வேரியண்ட் விலை ரூ. 69,052 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இநந்த மாடலில் டிவிஎஸ் நிறுவனத்தின் சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்கின்ற ஐ-டச் ஸ்டார்ட் சிஸ்டத்தைப் பெற்றுள்ளது.

பிஎஸ்-6 இன்ஜின் முறைக்கு மாற்றப்பட்ட பின்னர் டிஸ்க் பிரேக் பெறாத நிலையில் தற்போது முன்புற டயரில் டிஸ்க் பிரேக், பின்புறத்தில் டிரம் பிரேக் இணைக்கப்பட்டு கூடுதலாக எஸ்.பி.டி அம்சத்தை இணைத்துள்ளது. மற்றபடி இந்த வேரியண்டில் கூடுதலாக டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மாடலில் இடம்பெற்றிருக்கின்ற சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்கின்ற ஐ-டச் ஸ்டார்ட் அமைப்பினை பெற்று ஸ்டார்ட்டிங் மயத்தில் ஏற்படுகின்ற இரைச்சலை குறைப்பதுடன், பேட்டரியின் ஆயுளை அதிகரிக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆல் -இன்-ஒன்-லாக் வசதியை பெற்றதாக அமைந்துள்ளது. அதாவது எரிபொருள் நிரப்புவதற்கு திறக்க, இருக்கையின் அடியில் உள்ள ஸ்டோரேஜ் பகுதிகும், இக்னிஷன் என அனைத்திற்கும் ஒரே சாவி மூலம் திறக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிஎஸ் 6 உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்க என்ஜினை புதுப்பிக்க ET-Fi (Ecothrust Fuel injection) தொழில்நுட்பத்துடன் 7.33 BHP மற்றும் 8.4 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.

முன்பே விற்பனையில் உள்ள ஜூபிடர் கிளாசிக் மாடலை விட விலை சற்று குறைவாக அமைந்துள்ளது.

ஜூபிடர் – ரூ.66,870

ஜூபிடர் ZX – ரூ.68,870

ஜூபிடர் ZX டிஸ்க் – ரூ.73,420

டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் விலை ரூ. 73,970

(சென்னை எக்ஸ்ஷோரூம்)