பிஎஸ்6 டிவிஎஸ் எக்ஸ்எல் 100 விற்பனைக்கு வெளியானது

0

bs6 tvs xl 100

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு ஏற்ப வெளியிடப்பட்டுள்ள புதிய டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபெட் விலை ரூ.43,889 முதல் துவங்குகின்றது. முந்தைய மாடலை விட ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை மட்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Google News

ஈக்கோ திரஸ்ட் எஃப்ஐ என்ஜினை பெற்றுள்ள எக்ஸ்எல் 100 மாடலில் 99.7சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 4.43 ஹெச்பி பவர் மற்றும் 6.50 என்எம் டார்க் வெளிப்படுத்தும். FI என்ஜினை பெற்றுள்ள இந்த மாடல் முன்பை விட 15 சதவீதம் கூடுதலான மைலேஜ் வெளிப்படுத்தும். முந்தைய பிஎஸ்4 மாடலின் பவர் மற்றும் டார்க்கில் எந்த மாற்றமும் இல்லை.

கம்ஃபோர்ட், ஹெவி டூட்டி என இரு விதமான பிரிவில் விற்பனைக்கு வந்துள்ள பிஎஸ்6 மாடலில் ஸ்பெஷல் வேரியண்ட் உட்பட மொத்தமாக மூன்று விதமான வேரியண்ட்டினை பெற்று ஐ-டச் ஸ்டார்ட் , என்ஜின் கில் சுவிட்சும் இணைக்கப்பட்டுள்ளது. இரு பக்க டயர்களிலும் 110 மிமீ டிரம் பிரேக்குடன் எஸ்.பி.டி பிரேக்கிங் உடன், 16 அங்குல வீல் பெற்றுள்ளது.

பிஎஸ்6 டிவிஎஸ் எக்ஸ்எல் 100 விலை பட்டியல்

டிவிஎஸ் XL 100 – ரூ.43,889 (Heavy duty)

டிவிஎஸ் XL 100 – ரூ.45,129 (Heavy duty spl)

டிவிஎஸ் XL 100 – ரூ.45,459 (Comfort)