Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

டிவிஎஸ் ஜூபிடர் ZX டிரம் வேரியண்டிலும் ப்ளூடூத் வசதி அறிமுகம்

by automobiletamilan
August 3, 2023
in பைக் செய்திகள்
1
SHARES
0
VIEWS
ShareRetweet

tvs jupiter

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்கூட்டர் தயாரிப்பாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஜூபிடர் ZX டிரம் பிரேக் பெற்ற வேரியண்டிலும் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் வசதியை சேர்த்துள்ளது. கூடுதலாக ஆலிவ் கோல்டு நிறமும் வந்துள்ளது. முன்பாக டிஸ்க் வேரியண்டில் மட்டும் கிடைத்து வந்தது.

தற்பொழுது ஜூபிடர் ஸ்கூட்டர் வரிசையில் ஜூபிடர் SMW, Base, ZX, ZX Drum SmartXonnect, ZX Disc, ZX Disc SmartXonnect மற்றும் Classic என மொத்தமாக 7 விதமான வகைகளில் கிடைக்கின்றது.

2023 TVS Jupiter

ஏற்கனவே, ZX SmartXonnect வேரியண்டில் மட்டும் இடம்பெற்றிருந்த வசதி தற்பொழுது ZX Drum SmartXonnect என்ற புதிய வேரியண்டிலும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் வசதி மூலம் டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெறும் ஜூபிடர் புளூடூத் வாயிலாக இயக்கப்பட்ட தொழில்நுட்பமாகும். இது TVS Connect மொபைல் செயலி வசதி ஆண்ட்ராய் மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கிறது.

டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், குரல் உதவி, எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு எச்சரிக்கைகள். மேலும், டிவிஎஸ் இந்த வேரியண்டில் USB மொபைல் சார்ஜிங் போர்ட் பொருத்தியுள்ளது.

டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் மாடலில் உள்ள 109.7cc என்ஜின் அதிகபட்சமாக 7.77bhp பவர் மற்றும் 8.8Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

109 கிலோ எடை கொண்டுள்ள ஜூபிடர் ஸ்கூட்டர் பரிமாணங்கள் 1834 மிமீ நீளம், 678 மிமீ அகலம் மற்றும் 1286 mm உயரம் பெற்று, 1275 மிமீ வீல்பேஸ் கொண்டதாக உள்ளது.

  • Jupiter SMW ₹ 78 618
  • Base ₹ 81,683
  • ZX ₹ 86,158
  • ZX Drum SmartXonnect ₹ 88,493
  • ZX Disc ₹ 90,238
  • ZX Disc SmartXonnect ₹ 93,013
  • Classic ₹ 93,673

(எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)

Tags: TVS Jupiter
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan