Automobile Tamilan

டிவிஎஸ் ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை பட்டியல்

டிவிஎஸ் ஸ்கூட்டர்

இந்திய ஸ்கூட்டர் சந்தையில் இரண்டாவது மிகப்பெரிய தயாரிப்பாளராக உள்ள டிவிஎஸ் மோட்டார் ஸ்கூட்டர்களின் என்ஜின், மைலேஜ், சிறப்புகள் மற்றும் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.

டிவிஎஸ் நிறுவனம் 110cc சந்தையில் ஜூபிடர், ஜெஸ்ட் 110 மற்றும் 125cc சந்தையில் ஜூபிடர் 125 மற்றும் என்டார்க் 125, என்டார்க் 150 ஆகியவற்றுடன் கூடுதலாக டிவிஎஸ் ஸ்கூட்டி பெப்+ என 6 மாடல்கள் விற்பனை செய்து வருகின்றது. இதுதவிர எலக்ட்ரிக் பிரிவில் ஐக்யூப் , ஆர்பிட்டர் மற்றும் எக்ஸ் என மூன்று ஸ்கூட்டரை விற்பனை செய்கின்றது.

TVS Ntorq 150

மிக ஸ்போர்ட்டிவான ஸ்டைலை பெற்று 150சிசி ஏர் கூல்டு என்ஜினை பெற்று 4 புராஜெக்ட்ர் எல்இடி விளக்குடன் 4 விதமான நிறங்களை கொண்டு கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளில் பலவற்றை முதன்முறையாக பெற்றுள்ளது.

2025 TVS Ntorq 150
என்ஜின் (CC) 149.7 cc
குதிரைத்திறன் (bhp@rpm) 13.1 bhp @ 7000 rpm
டார்க் (Nm@rpm) 14.2 Nm @ 5500 rpm
கியர்பாக்ஸ் CVT
மைலேஜ் 38 Kmpl

டிவிஎஸ் என்டார்க் 150 போட்டியாளர்கள் ஏப்ரிலியா எஸ்ஆர் 175, யமஹா ஏரோக்ஸ் 155, ஹீரோ ஜூம் 160 ஆகியவை உள்ளது.

2025 டிவிஎஸ் என்டார்க் 150 ஆன்-ரோடு தமிழ்நாடு விலை ₹ 1,43,254 முதல் ₹ 1,54,660 வரை கிடைக்கும்.

TVS Orbiter

டிவிஎஸ் மோட்டாரின் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.99,900 விலையில் 3.1Kwh பேட்டரி பெற்று 158கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என உறுதி செய்யப்பட்டு உண்மையான ரேஞ்ச் 120 கிமீ வரை வழங்கலாம். 5.5 அங்குல எல்சிடி கிளஸ்ட்டரை பெற்று ப்ளூடூத் இணைப்புடன் பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.

 

 Orbiter Specification
பேட்டரி பேக் 3.1 kwh
பவர் 2.5KW
டார்க்
டாப் ஸ்பீடு 68
ரேஞ்ச் (claimed) 120 km
ரைடிங் மோடு Eco, City

டிவிஎஸ் ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ₹ 1,08,530 கிடைக்கும்.

 

TVS Iqube

இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இரண்டாம் இடத்தில் உள்ள டிவிஎஸ் ஐக்யூப் மாடலில் 2.2kwh, 3.1KWh, 3.4kwh, S 3.4kwh, ST 3.4kwh, மற்றும் 5.1kwh என ஆறு விதமான வேரியண்டுகளில் கிடைக்கின்றது.

3.4 KWh லித்தியம் ஐயன் பேட்டரி பெற்ற ஐக்யூப் சிங்கிள் சார்ஜில் ஈக்கோ மோடில் உண்மையான பயணிக்கும் ரேஞ்ச் 75-150 கிமீ வரை வழங்குவதாக பயனர்களின் தரவுகளின் படி குறிப்பிட்டு உள்ளேன். ஐக்யூப் ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ. ₹ 1,08,157  முதல் ₹ 1,86,808 வரை உள்ளது.

 iQube Specification iQube iQube iQube ST
பேட்டரி பேக் 2.2 kwh 3.4 kWh 5.1 kWh
பவர் 3KW 3kw 3kw
டார்க் 33 Nm 33 Nm 33 Nm
டாப் ஸ்பீடு 75 km 78 km/h 82 km/h
ரேஞ்ச் (claimed) 75 km 100 km 150 km
ரைடிங் மோடு Eco, Power Eco, Power Eco, Power

2025 டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ₹ 1,15,530  முதல் ₹ 1,99,976 வரை கிடைக்கும்.

2024 TVS Scooty Pep+

சிறப்பான மைலேஜ் மற்றும் குறைந்த எடை கொண்டுள்ள ஸ்கூட்டி பெப் பிளஸ் பெண்கள் பெரிதும் விரும்புகின்ற ஸ்கூட்டர் மாடலாகும். 87.8cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 5.36 hp பவரை வழங்குகின்றது. இரண்டு டயர்களிலும் டிரம் பிரேக் பெற்று 10 அங்குல வீல் பெற்றுள்ளது. ஸ்கூட்டி பெப் பிளஸ் ஸ்கூட்டரின் விலை ₹ 66,065 முதல் ₹ 69,530 வரை எக்ஸ்ஷோரூம் விலை உள்ளது.

2024 TVS Scooty Pep+
என்ஜின் (CC) 87.8 cc
குதிரைத்திறன் (bhp@rpm) 5.36 bhp @ 6500 rpm
டார்க் (Nm@rpm) 6.5 Nm @ 3500 rpm
கியர்பாக்ஸ் CVT
மைலேஜ் 50 Kmpl

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப்+ ஸ்கூட்டருக்கு நேரடியான போட்டியாளர்கள் இல்லையென்றாலும் 110cc ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளுகின்றது.

2024 டிவிஎஸ் ஸ்கூட்டி பெப்+ ஆன்-ரோடு விலை ₹ 81,537  முதல் ₹ 85,424 வரை கிடைக்கும்.

 

2024 TVS Jupiter 110

ஆக்டிவா ஸ்கூட்டரை தொடர்ந்து இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற 2024 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரில் 113.3 cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சத்தம் இல்லாமல் ஸ்டார்டிங் ஜெனரேட்டர் வசதி, டிவிஎஸ் igo எனப்படுகின்ற 10 % கூடுதலாக மைலேஜ் வழங்கும் வகையிலான ஹைபிரிட் அம்சம்இந்த ஸ்கூட்டரில் கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்கும் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் உள்ளது. டிஸ்க் மற்றும் டிரம் என இரு விதமான பிரேக்கிங் ஆப்ஷனுடன் கிளாசிக் என்ற வேரியண்ட் பல்வேறு ரெட்ரோ ஸ்டைல் அம்சங்களை கொண்டதாக உள்ளது. இந்த மாடலின் விலை ரூ.78,718 முதல் ரூ.93,773 வரை எக்ஸஷோரூம் ஆகும்.

2024 TVS Jupiter 110
என்ஜின் (CC) 113.3 cc
குதிரைத்திறன் (bhp@rpm) 7.91 bhp @ 6500 rpm
டார்க் (Nm@rpm) 9.8 Nm @ 5500 rpm
கியர்பாக்ஸ் CVT
மைலேஜ் 50 Kmpl

டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஹீரோ பிளெஷர் பிளஸ், ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஆகும்.

டிவிஎஸ் ஜூபிடர் ஆன்-ரோடு விலை ₹ 97,856 முதல் ₹ 1,13,765 வரை உள்ளது.

2024 TVS Scooty Zest 110

டிவிஎஸ் நிறுவனத்தின் மற்றொரு குறைந்த விலை மாடலான ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டரில் டிரம் பிரேக் கொடுக்கப்பட்டு இருபக்க டயர்களிலும் 90 / 100 – 10 கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் எக்ஸ்ஷோரூம் விலை ₹ 68,798 முதல் ₹ 72,038 வரை உள்ளது.

2023 TVS Zest 110
என்ஜின் (CC) 109.7 cc
குதிரைத்திறன் (bhp@rpm) 7.71 bhp @ 7500 rpm
டார்க் (Nm@rpm) 8.8 Nm @ 5500 rpm
கியர்பாக்ஸ் CVT
மைலேஜ் 48 Kmpl

டிவிஎஸ் ஜெஸ்ட் போட்டியாளர்களாக 110cc சந்தையில் உள்ள மாடல்களான ஜூபிடர் 110, மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஹீரோ பிளெஷர் பிளஸ், ஆக்டிவா ஆகும்.

2024 டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஆன்-ரோடு விலை ₹ 86,570 (Gloss) முதல் ₹ 89,982 (Matte) வரை உள்ளது.

2024 TVS Jupiter 125

அதிகப்படியான இருக்கைக்கு அடியில் ஸ்டோரேஜ் பெற்ற 125cc சந்தையில் உள்ள மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ள டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் பவர் 8.04 hp பவரை வெளிப்படுத்துகின்றது. டிரம் மற்றும் டிஸ்க் என இரு விதமான பிரேக்கிங் ஆப்ஷனுடன் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் வசதியை கொண்டுள்ளது. ஜூபிடர் 125 ஸ்கூட்டர் விலை ₹ 90,255 முதல் ₹ 99,905 வரை உள்ளது.

2023 TVS Jupiter 125
என்ஜின் (CC) 124.8 cc
குதிரைத்திறன் (bhp@rpm) 8.05 bhp @ 6500 rpm
டார்க் (Nm@rpm) 10.5 Nm @ 4500 rpm
கியர்பாக்ஸ் CVT
மைலேஜ் 46 Kmpl

டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டருக்கு போட்டியாக ஹோண்டா ஆக்டிவா 125, சுசூகி ஆக்செஸ் 125, யமஹா ஃபேசினோ, மேஸ்ட்ரோ எட்ஜ் 125, ஹீரோ டெஸ்ட்டினி 125 போன்றவை விற்பனையில் உள்ளது

2023 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு தமிழ்நாடு விலை ₹ 1,09,560 முதல் ₹ 1,22,651 வரை கிடைக்கும்.

2024 TVS Ntorq 125

ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்றுள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் என்டார்க் 125 ஸ்கூட்டரில் 125cc என்ஜின் பெற்றுள்ளது. கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்கும் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் உள்ளது. டிஸ்க் மற்றும் டிரம் என இரு விதமான பிரேக்கிங் ஆப்ஷனுடன் ரேசிங் மற்றும் XT என்ற வேரியண்ட் பல்வேறு ஸ்டைல் அம்சங்களை கொண்டதாக உள்ளது.

2023 TVS Ntorq 125
என்ஜின் (CC) 124.8 cc
குதிரைத்திறன் (bhp@rpm) 9.25 bhp @ 6500 rpm
டார்க் (Nm@rpm) 10.5 Nm @ 4500 rpm
கியர்பாக்ஸ் CVT
மைலேஜ் 45 Kmpl

டிவிஎஸ் ஸ்கூட்டர் போட்டியாளர்கள் சுசூகி அவெனிஸ், சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட், யமஹா ரே ZR, மற்றும் கிரேஸியா 125, ஹீரோ ஜூம் 125 ஆகியவை உள்ளது.

2024 டிவிஎஸ் என்டார்க் 125 ஆன்-ரோடு தமிழ்நாடு விலை ₹ 1,07,210 முதல் ₹ 1,35,098 வரை கிடைக்கும்.

Ntorq 125 Drum – ₹ 1,07,210

Ntorq 125 Disc – ₹ 1,15,098

Ntorq 125 Race Edition – ₹ 1,19,953

Ntorq 125 Super Squad Edition – ₹ 1,21,054

Ntorq 125 Race XP ₹ 1,25,764

Ntorq 125 XT ₹ 1,35,098

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்-ரோடு விலை பட்டியலும் தமிழ்நாட்டின் தோராயமானதாகும்.. எனவே விலை விபரம் டீலர்களுக்கு டீலர் மாறுபடும்.. துல்லியமான விலையை அறிய டீலரை அனுகுங்கள். கூடுதல் ஆக்செரிஸ் இணைக்கும் பொழுது விலை மாறுபடும்.

onroad price Tamil Nadu updated – 04-09-2025

Exit mobile version