Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் இரு வண்ண கலவை அறிமுகம்

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 5,September 2017
Share
1 Min Read
SHARE

110சிசி சந்தையில் விற்பனையில் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கில் பண்டிகை காலத்தை முன்னிட்டு இரு வண்ண கலவை பெற்ற மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தோற்றம், 3டி டிவிஎஸ் பேட்ஜ் மற்றும் கூடுதல் பாடி கிராபிக்ஸ் தவிர வேறு எவ்விதமான மாற்றங்களும் இல்லை.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ்

விற்பனையில் உள்ள மாடலின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லாமல்,  8.30 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 109.7 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 8.70 Nm ஆகும். இதில் 4 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. டிவிஎஸ் ஸ்டார்ட் சிட்டி + பைக் மைலேஜ் லிட்டருக்கு 86 கிமீ என ஆராய் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தோற்ற அமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் கருப்பு நிற கிராப் ரெயில், முப்பரிமாண டிவிஎஸ் பேட்ஜ் ஆகியவற்றுடன் கருப்பு-சிவப்பு, கருப்பு-நீலம், சிவப்பு-கருப்பு ஆகிய நிறங்களுடன் கிடைக்கின்றது.

இந்த பைக்கில் முன்புற சக்கரங்களுக்கு 130மிமீ டிரம் பிரேக் மற்றும் பின்புற சக்கரங்களில் 110மிமீ டிரம் பிரேக் பெற்றிருக்கின்றது.

சாதாரண எலக்ட்ரிக் ஸ்டார்ட் மாடலை விட ரூ.1000 வரை விலை கூடுதலாகவும், கிக் ஸ்டார்ட்ர் மாடலை விட ரூ.5000 விலை கூடுதலாக அமைந்துள்ள இரு வண்ண கலவை டிவிஎஸ் ஸ்டார் சிட்டி + விலை ரூ. 50,800 (எக்ஸ்-ஷோரூம் சென்னை) ஆகும்.

பிஎஸ்-6 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசை விற்பனைக்கு வெளியானது
புதிய TFT கிளஸ்ட்டருடன் கேடிஎம் 200 டியூக் அறிமுகமானது
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் விலை உயர்ந்தது
இந்தியாவில் ஹோண்டாவின் 300-350cc பைக்குகள் ரீகால் அழைப்பு
2019 யமஹா MT-15 அறிமுகம் செய்யப்பட்டது
TAGGED:TVS
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
Honda Shine 100 DX Pearl Igneous Black
Honda Bikes
ஹோண்டா ஷைன் 100DX விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
2025 hero karizma xmr 210 combat edition
Hero Motocorp
ஹீரோ கரீஸ்மா XMR 210 பைக்கின் விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
ஓலா S1 Pro
Ola Electric
ஓலா S1 Pro எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved